விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை அடுத்து அவருடைய துப்பறிவாளன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் லத்தி படத்தின் பிரமோஷனுக்காக பல சேனல்களில் பேட்டி கொடுத்த இவர் தன்னை பற்றி வரும் பல்வேறு செய்திகளுக்கும் விளக்கம் அளித்தார்.
அதில் இவருடைய அரசியல் ஆசை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு அரசியலில் இறங்க வேண்டும் என்ற ஆசையில் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார். ஆனால் சில காரணங்களால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. தற்போது அதை பற்றி பேசி இருக்கும் விஷால் எனக்கு சினிமாவில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பெயரே போதும். அரசியல் ஆசை எல்லாம் எனக்கு எப்போதும் கிடையாது என்று ஒரு அறிக்கை விட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.
ஏனென்றால் பல வருடங்களாகவே விஷாலின் நடவடிக்கை அனைத்தும் அரசியலுக்கான ஒரு முன்னோட்டமாக தான் இருந்தது. அதன் முதல் படி தான் நடிகர் சங்க தேர்தல். அந்த தேர்தலில் தீயாக வேலை செய்து பதவியை கைப்பற்றிய விஷால் இப்போது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கைக்குள் தான் வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த தேர்தலில் ஜெயித்த பின் நடிகர் சங்க கடனை அடைப்பேன் என்றும் கட்டிடம் கட்டுவேன் என்றும் வீரவசனம் பேசி இருந்தார்.
மேலும் அந்த கடனை அடைப்பதற்காகவே ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருந்தார். ஆனால் அப்போது தீவிர அரசியல் ஆசையில் இருந்த விஷால் தயாரிப்பாளரிடம் நான் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடப் போகிறேன். அங்கு தெலுங்கு மக்கள் மிகவும் அதிகம். அதனால் எனக்கு நிச்சயம் அதிக ஓட்டுகள் கிடைக்கும். அதன் பிறகு அரசியலில் நான் மிகவும் பிசியாகி விடுவேன் என்று கூறி அவரை டீலில் விட்டிருக்கிறார்.
Also read: கான்ஸ்டபிள் முருகானந்தமாக வாழ்ந்திருக்கும் விஷால்.. லத்தி பட முழு விமர்சனம்
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு அந்த தொகுதியில் நடந்த தேர்தல் மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்பொழுதுதான் நடிகர் சங்க தேர்தலும் முடிவடைந்த சமயம். அதில் வெற்றி பெற்றிருந்த விஷால் தேர்தலும் தனக்கு சாதகமாக தான் அமையும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார். மிகப்பெரிய கனவுடன் அந்த தேர்தலில் போட்டியிட அவர் நாமினேஷன் தாக்கல் செய்தார்.
ஆனால் அவருடைய அந்த நாமினேஷன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்னர் இந்த அரசியல் எல்லாம் நமது சரிப்பட்டு வராது என புரிந்து கொண்ட விஷால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இப்போதும் அவருக்கு அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் அவர் வெளிக்காட்டி கொள்ளாமல் அதில் எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை என்று வெளிவேஷம் போட்டு வருகிறார்.
Also read: விஜய்யின் சோலியை முடிக்க திட்டம் தீட்டிய விஷால்.. வலையில் சிக்குவாரா தளபதி