சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஜெயிலர் படத்தை ஒரு வழி பண்ணிட்டு தான் விடுவாங்க போல.. விஜய், அஜித் பேரை சொல்லி சுத்தலில் விடப்பட்ட நெல்சன்

Jailer Movie: நெல்சன் இயக்கத்தில் உருவான படம் தான் ஜெயிலர். இப்படத்தின் ஆடியோ லான்ச் இன் போது ரஜினி பேசப்பட்ட வார்த்தையை பூதாகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மேற்கொள்ளும் செயல் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

பல எதிர்பார்ப்புகளை முன்வைத்து இம்மாதம் 10ம் தேதி ரஜினியின் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் படத்தில் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஆடியோ லான்ச் ரஜினி பேசிய காக்கா பருந்து கதை தற்போது வரை தமிழ் சினிமாவில் சர்ச்சையாக பார்க்கப்பட்டு வருகிறது.

Also Read: அடுத்த ஹிட்க்கு தயாரான மோட்டார் மோகன்.. பெங்களூர் தக்காளியுடன் படப்பிடிப்பை தொடங்கி விஜய் சேதுபதி

இதை குறித்து விஜய் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க கூடாது என்பதற்காக தன் குடும்பங்களையும் தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்போது தான் இப்படத்தின் வசூல் குறையும் அதன் பின் வரும் லியோ படத்தின் வசூல் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இதற்கு எதிராக, இது மட்டும் நடந்து விட்டால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு ஜெயிலர் படம் பார்க்க செல்வோம் என அஜித் ரசிகர்கள் புறப்பட்டு விட்டார்களாம். இப்படி மாறி மாறி எடுக்கும் முடிவுகள் எங்க போய் முடியப் போகிறதோ என தெரியவில்லை.

Also Read: சும்மா இருந்த கேப்டனை சொறிஞ்சு விட்ட விஜய் டிவி.. நாக்கை துருத்திக் கொண்டு வெளுத்து வாங்கிய சம்பவம்

தமிழ் சினிமா இப்படி ஒரு நிகழ்வை இதுவரை எந்த படத்திருக்கும் சந்தித்தது இல்லை எனவும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி காணப்பட்டு வருகிறார் இயக்குனர் நெல்சன்.

இது என்னடா ஜெயிலர் படத்திற்கு வந்த சோதனை என நினைக்கும் அளவிற்கு விஜய் மற்றும் அஜித் பேரை சொல்லி அவர்களின் ரசிகர்கள் மேற்கொள்ளும் செயல்கள் நெல்சனை சுத்தலில் விட்டு வருகிறது. இனி இப்படத்தின் ரிலீஸின் போது என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: விஜய் குட்டி ஸ்டோரியை வைத்து பதிலடி கொடுப்பதற்கு நாள் குறிச்சாச்சு.. பிரம்மாண்டமாக வரவுள்ள லியோ ஆடியோ லான்ச்

Trending News