செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

ஹிட் கொடுத்து 10 வருஷமாச்சு.. கங்குவா மட்டும் 2000 கோடி வசூலிக்குமா? சூர்யாவை தாக்கிய பிரபலம்

சூர்யாவின் படங்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை வெளியாகவுள்ள கங்குவா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. இப்படத்தின் வசூல் பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கங்குவா படத்திற்கு ரூ.2000 கோடி வசூல் வருமா? என்ற கேள்விக்கு என்று சினிமா பிரபலம் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்குவா

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றியுள்ள படம் கங்குவா. இதில், சூர்யாவுடன் இணைந்து அனிமல் பட புகழ் பாபி தியோல், திஷா பதானி, நட்டி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளானர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும்,யுவி கிரியேசனும் இணைந்து இப்படத்தை ரூ. 360 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர

இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதற்கொண்டு, போஸ்டர் ரிலீஸ், முதல் சிங்கில், இப்படத்தின் ரீசர் என ஒவ்வொரு அப்டேட்டிற்கும் இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு குவிந்தன. இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு, ரஜினியின் வேட்டையன் படம் அதே வெளியாகும் என்பதால் அப்படத்திற்கு முன்னுரிமை கொடுத்து, நவம்பர் 14 ஆம் தேதிக்கு கங்குவா ரிலீஸை தள்ளி வைத்தனர்.

கங்குவா ரூ.2000 கோடி வசூலிக்கும் – ஞானவேல் ராஜா

சோலோவாக ரிலீஸாக இப்படத்தின் அனைத்து பணிகள் நிறைவடைந்து, இப்படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, மீடியாக்கள், யூடியூப்களில் இயக்குனர் சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் தொடர்ந்து பேட்டியளித்து வருகின்றனர். உலகம் முழுவதும் 38 மொழிகளில் 3 டி தொழில் நுட்பத்தில் அதிக திரையரங்களிலும் ரிலீஸ் ஆவதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இப்பட புரமோசனின் கலந்து கொண்டு பேசிய ஞானவேல்ராஜா, கங்குவா படம் ரூ.2000 கோடி வசூல் குவிக்கும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படம் பாகுபலியை விட தங்கல், ஜவானை விட அதிக வசூல் குவிக்குமா? என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால்,திரைக்கதை, நடிப்பு, இப்படத்தின் விஎஃப்.எக்ஸ் இதெல்லாம் நன்றாக இருந்தால் ஞானவேல் ராஜா கூறியதைக் காட்டிலும் அதிக வசூலித்து இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கலாம். அதனால் இப்படம் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் குறிப்பாக வட இந்தியாவில் மட்டும் ரூ.22 கொடி செலவு செய்து ரிலிஸ் செய்கிறார்கள் என நெட்டிசன்கள் விவாதம் செய்தனர்.

கங்குவா படம் வசூல் பற்றி சினிமா விமர்சகர் கருத்து

இந்த நிலையில், கங்குவா படத்தின் வசூல் மற்றும் சூர்யாவின் மார்க்கெட் நிலவரம் பற்றி பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ’’கங்குவா பட புரமோசனில் ஆங்கர் ரூ.1000 கோடி இப்படம் வசூலிக்குமா என ஞானவேல் ராஜாவிடம் எனக் கேட்டதற்கு அவர், ஏன் ரூ.1000 கோடி, 2000 கோடின்னு சொல்லுங்களேன் என்று கூறினார்.அவர் கேஷிவலாக விளையாட்டாக கூறியதை பலரும் சீரியசா எடுத்துக் கொண்டனர். சூர்யாவுக்கு என தனி மார்க்கெட் உள்ளது. அதை தாண்டி அவர் யோசிக்க மாட்டார் ’’என்று கூறினார்.

மேலும், சூர்யாவின் தமிழ் சினிமா மார்க்கெட் எப்படி என ஆங்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ’’ஜெய்பீம், சூரரைப் போற்று துரதிஷ்டவசமாக ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆயின.இவை இரண்டும் தியேட்டரில் ரிலீசாகி வெற்றி பெற்று இருந்தால் சூர்யாவின் மார்க்கெட் வேற லெவலில் போயிருக்கும். ஆனால் சூர்யாவின் படங்கள் தியேட்டரிக்கலா எதுவுமே ஓடவில்லை. கடைசியாக சன்பிக்சர்ஸின் எதற்கும் துணிந்தவன் படம் வரை எதுவும் ஹிட்டில்லை.

ஓடிடியில ஹிட்டானதுனாலதான் சூர்யாவின் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. கங்குவா படத்தின் டிரையில் அப்படம் செலவு, பிரமாண்டம் புரமோசன் பார்க்கும்போது அதிக நிஜமாலும் இப்படம் வேறு மாதிரி படமாக இருக்கும் என தோன்றுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

கம்பேக் கொடுப்பாரா சூர்யா?

இந்த நிலையில், அஜித், விஜய் இருவரும் சினிமாவில் ஹிட் கொடுக்க தடுமாறி போது, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் 1-2 போன்ற படங்கள் மூலம் வரிசையாக ஹிட் கொடுத்த சூர்யா கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் கங்குவா தியேட்டரில் ரிலீஸ் ஆவதன் மூலம் அவர் கம்பேக் கொடுத்து, தன்னை நிரூபிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
surya anthanan

- Advertisement -spot_img

Trending News