வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜயகாந்த் வாரிசு நடிக்க வந்து 10 வருஷம் ஆச்சு.. இப்பதான் விஷாலுக்கு கண்ணு தெரியுது போல

Vishal About Vijayakanth’s son: விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ஆம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால் கமல், விக்ரம், நாசர், கார்த்தி, ஜெயம் ரவி, விஷால், தேவயானி மற்றும் பலர் கலந்து கொண்டு விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்பொழுது இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், விஜயகாந்த் தொடர்பான பல விஷயங்களை நினைவூட்டினார். அதாவது இவர் என்ன பேசினாலும் அது ஒரு எதார்த்தமான பேச்சாக தெரியவில்லை. முக்கியமாக விஜயகாந்த் இறப்பிற்கு நேரடியாக வராமல் வீடியோ மூலம் வெளியிட்டு அஞ்சலி செலுத்திய விஷயங்கள் அப்படியே பார்ப்பதற்கு ஆர்டிபிசியல் ஆக இருந்தது.

அதன் பின் பல நாட்கள் கழித்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய விஷயங்களும் கொஞ்சம் கூட இவருடைய கேரக்டருக்கு சம்பந்தமே இல்லாத அளவிற்கு ஒரு மகா நடிகனாக இவரை வெளிக்காட்டி விட்டார். அந்த வகையில் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் ஒரு பொதுச் செயலாளராக பேசி இவர் செய்த தவறை எல்லாம் மறைக்கும் விதமாக ஏதோ வாய்க்கு வந்தபடி உளறி இருக்கிறார்.

Also read: நடிகர் சங்கத்திற்கு பணம் தர யோசிக்கும் ரஜினி.. வாய் வார்த்தையுடன் நிறுத்திக் கொண்ட விஷால்

அதாவது விஷால் பேசியது என்னவென்றால் அண்ணன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு விருப்பமானால் அவருடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன். அதுதான் நான் கேப்டனுக்கு செய்யும் சிறு நன்றி கடன் என்று சொன்னார். ஆனால் சண்முக பாண்டியன் நடிக்க வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. 2015 ஆம் ஆண்டு சகாப்தம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார்.

அப்பொழுதெல்லாம் விஷால் கண்ணுக்கு தெரியாத இவர் இப்பொழுது மட்டும் சண்முக பாண்டியனுக்கு நான் கை கொடுத்து தூக்கி விடுவேன் என்று மேடையில் புருடா விட்டு பேசி இருக்கிறார். உண்மையிலே இவருக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்றால் விஷால் நடிக்கப் போகும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை சண்முக பாண்டியனுக்கு கொடுக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு அவர் நடிக்கும் படத்தில் நான் கெஸ்ட் ரோல் பண்ண தயார் என்று சொல்வது தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் இருக்கிறது. ஆக மொத்தத்தில் சண்முக பாண்டியனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை விட விஷால் செய்த தவறை மறைத்து ரசிகர்களிடம் எப்படியாவது நல்ல பெயரை எடுத்து விட வேண்டும் என்பதற்காக பேசியது போல் இருக்கிறது.

Also read: புத்தாண்டு மயக்கம் தெளிந்த விஷால்.. விஜயகாந்த் சமாதியில் கண்ணீரோடு போட்ட பெர்ஃபாமன்ஸ்

Trending News