தளபதி 67-லியோ படம் உருவாக போகிறது என்ற விஷயம் தெரிந்ததிலிருந்து இந்த படத்தில் பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக இணையத்தில் பல பெயர்கள் அடிபட்டது. அந்த வகையில் சஞ்சய் தத், விஷால், மிஸ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிக்கான் போன்றோரின் பெயரும் இதில் அடங்கும்.
மேலும் ரசிகர்கள் கணித்த படி விஷாலைத் தவிர மற்ற பிரபலங்கள் எல்லோருமே லியோ படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தில் விஷாலை நடிக்க வைக்க வேண்டும் என்ற லோகேஷ் மிகவும் முயற்சி செய்தாராம். இதில் தயாரிப்பாளருக்கு துளி கூட எண்ணம் இல்லையாம்.
Also Read: விக்ரமை விட வசூலை ஜாஸ்தியாக லோகேஷ் படும் பாடு.. தளபதி 67 செய்யப்போகும் சம்பவம்
ஏனென்றால் சமீபகாலமாக சினிமா துறையில் விஷால் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதுவும் அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கூட சரியான நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வது இல்லையாம். இதனால் தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் தான் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் விஷால் இந்த படத்தில் வேண்டாம் என்று லோகேஷிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் பேச்சை மீறியும் லியோ படத்தில் விஷால் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் ஓகே வாங்கி விட்டாராம்.
Also Read: தளபதி 67 பட பூஜைக்கு வந்த முக்கிய 2 இயக்குனர்கள்.. அடுத்த பட கூட்டணிக்கு போட்ட அடித்தளம்
அதன் பிறகு தயாரிப்பாளர் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்துள்ளார். தீபாவளி ரிலீசுக்கு லியோ படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இப்போது இந்த படத்தில் விஷாலை போட்டால் கண்டிப்பாக ரிலீஸ் தேதி தாமதமாகும். மேலும் விஷால் மீது பல குற்றச்சாட்டுகள் தயாரிப்பாளர்கள் வைத்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
காரணம் நடிகர் சங்கத்தில் விஷால் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் லியோ படத்தில் இருந்து விஷாலை தவிர்ப்பது நல்லது என்று லோகேஷிடம் லலித் அறிவுரை கூறியுள்ளார். இதைக்கேட்டு லோகேஷ் சமாதானமாகி உள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Also Read: வசூல் மன்னனை பின்னுக்கு தள்ளிய ஏகே.. தளபதி 67, ஏகே 62 படங்களில் அஜித், விஜய்யின் சம்பளம்