திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் ரிலீசுக்கு முன்பு இது மட்டும் நடந்திருக்கணும்.. அண்ணாத்தய விட மோசமான தோல்வி பார்த்திருப்பார் ரஜினி

Jailer Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முந்தைய படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், அவரது நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு ஜெயிலர் படம்  மாபெரும் ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் தற்போது வரை வெறும் 13 நாட்களில் 518 கோடியை அசால்டாக பாக்ஸ் ஆபிஸில் குவித்து இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் இந்த ஒரு விஷயம் மட்டும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ்க்கு முன்பு நடந்திருந்தால், நிச்சயம் அண்ணாத்த படத்தை விட மோசமான தோல்வியை ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி சந்தித்து இருப்பார். ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் படுதோல்வியை சந்தித்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

Also Read: ரஜினி அரசியலை வெறுத்ததற்கு இப்படி ஒரு காரணமா.? ஆன மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்க!

இந்நிலையில் இப்பொழுது  ஜெயிலர் படம் அதேபோல் ஆயிருக்க வேண்டிய நிலையில் இருந்து தப்பித்துள்ளது, ஏதோ ரஜினிக்கு நல்ல நேரம் நடந்து விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் செய்த பெரும் தவறால் ரஜினியின் ரசிகர்கள் கொந்தளிப்பில் இருந்தனர். ரஜினியை கடவுள் போல ரசிகர்கள் பார்க்கின்றனர்.

ஆனால் சூப்பர் ஸ்டாரோ அவரைவிட 21 வயது கம்மியான முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்துவிட்டார், இது பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த சம்பவத்திற்கு ரஜினி செய்தியாளர் சந்திப்பிலும் விளக்கம் அளித்தது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தி இருக்கிறது.

Also Read: குடிப்பதற்கு தினுசு தினுசாக காரணம் தேடிய ரஜினி.. காலையில் 8 மணிக்கே கம்பெனி கொடுத்த நடிகர்

ஏனென்றால் ‘சன்னியாசிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் தன்னைவிட வயது குறைவாக இருந்தாலும் அவர்களது காலில் விழுவது தான் என்னுடைய வழக்கம்’ என்று ரஜினி செம கூலாக விளக்கம் அளித்தார். இதுவும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

ஆனால் ஜெயிலர்  படம் ரிலீஸ்-க்கு முன்பு ரஜினி இப்படி காலில்  விழுந்திருந்தால், நிச்சயம் ஜெயிலர் படம் படுதோல்வி அடைந்திருக்கும். தலையெழுத்து மாறியதால் தப்பித்த ரஜினி என்றுதான் சொல்ல வேண்டும்.  அந்த அளவிற்கு ரஜினி செய்த செயலால் அண்ணாத்த படத்தை விட மோசமான தோல்வி அடைந்திருக்கும்  படமாக ஜெயிலர் மாறி இருக்கும், ஏதோ இந்த சம்பவம் படம் ஹிட்டான பிறகு நடந்துள்ளது.

Also Read: இப்பவும் 900 தியேட்டர்களில் வெற்றியை கொண்டாடும் ஜெயிலர்.. ஆன விக்ரம் படம் ஓட அருண் விஜய்க்கு ஆடர் போட்ட கமல்

Trending News