ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

ஜனநாயகத்திற்காக கையில் தீப்பந்தம் ஏந்தும் தளபதி.. விஜய் – எச் வினோத் கூட்டணியில் தளபதி 69

Thalapathy 69: கோட் படம் ரிலீஸ் ஆகி ஒரு சில நாட்களிலேயே நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகிவிட்டது. விஜய் ரசிகர்களை பொறுத்த வரைக்கும் இது ஒரு சந்தோஷமும், சோகமும் கலந்த தருணம்.

அதாவது கோட் படம் ரிலீசான சமயத்திலேயே தளபதி இன்னும் ஒரு படத்தில் தான் நடிப்பார் என அவருடைய ரசிகர்கள் தங்களுடைய சோகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். இந்நிலையில் நேற்று 1 லாஸ்ட் டைம் என்ற பதிவோடு தளபதி 69 படத்தின் அப்டேட் காண முன்னறிவிப்பு வெளியான போதே தளபதியின் கடைசி படம் என்ற சோகம் நெருட ஆரம்பித்துவிட்டது.

விஜயின் கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்று பெரிய சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது. இயக்குனர்கள் பல பேரின் பெயர் அவ்வப்போது வெளியானது. இறுதியாக தற்போது இயக்குனர் எச் வினோத் தான் இந்த படத்தை இயக்கப் போவது என்பது உறுதியாகிவிட்டது.

விஜய் – எச் வினோத் கூட்டணியில் தளபதி 69

தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணனின் கே வி என் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. நடிகர் விஜயின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் அவருடைய கடைசி படத்திலும் இணைகிறார். இந்த படத்தின் போஸ்டரே அரசியல் பேசியிருக்கிறது.

‘The torch bearer of democracy’ என்ற பதிவோடு விஜயின் கை ஒளிபந்தத்தை பிடித்திருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது ஜனநாயகத்திற்கான வெளிச்சத்தை ஏந்துபவர் என பதிவிட்டு விஜயின் அரசியல் நகர்வுக்கான படம் என்பதை இயக்குனர் தெளிவாக உணர்த்திவிட்டார்.

Thalapathy 69
Thalapathy 69

படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகளுக்காக தற்போது விஜயின் ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள். வெற்றி என்னும் படத்தில் ஆரம்பித்த விஜயின் சினிமா பயணம் அவருடைய 69 ஆவது படத்தோடு முடி இருக்கிறது. இந்த படப்பிடிப்பின் வேலைகள் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியல்வாதியாகிவிடுவார்.

அக்டோபர் 2025 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் பண்ண திட்டமிட்டு இருக்கிறது. இதிலிருந்து ஆறு முதல் ஏழு மாதங்களில் விஜய் தன்னுடைய முதல் தேர்தலை தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக சந்திக்க இருக்கிறார்.

வசூலை அள்ளும் கோட்

Trending News