புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்துவின் அப்பாவால் ரோகிணியின் முகத்திரை கிழியும் நேரம் வந்தாச்சு.. விஜயா வைக்க போகும் செக்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து, மீனாவின் தம்பி பேசியது நினைத்து ரொம்பவே கோபத்துடன் வீட்டில் இருக்கிறார். இதை மீனா பார்த்த பின் என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு முத்து இனி உன் வீட்டுக்கு போக கூடாது. உன் தம்பியிடம் எந்தவித பேச்சு வார்த்தையும் வச்சிக்க கூடாது என்று சொல்கிறார்.

உடனே மீனா நான் ஏன் போக கூடாது என்று கேட்கிறார். உன் தம்பி கார் செட்டுக்கு வந்து தேவையில்லாமல் பேசுகிறான். நான் அவனிடம் போய் ஏதாவது பேசு என்று உன்னை தூது அனுப்பினனா, அவன் எதுக்கு தேவை இல்லாம என்கிட்ட வம்பு வைக்கிறான் என்று சொல்கிறார். அவன் யார்கிட்ட வேலை பார்த்தா எனக்கு என்ன, எப்படியும் என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கான்.

அது உங்களால் கண்டிக்க முடியல, உங்க பேச்சை அவன் கேட்க மாட்டான் அதோட நிறுத்திக்க சொல்லு. என்கிட்ட மறுபடியும் ஏதாவது பேசி வம்பு இழுத்தானா, உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன் என்று முத்து மொத்த கோபத்தையும் மீனாவிடம் காட்டிவிடுகிறார். அதோடு விடாமல் இனி உன் வீட்டுக்கு போக கூடாது என்று சொல்கிறார். அதற்கு மீனா நான் என் அம்மா தங்கையை எப்படி பார்க்காமல் இருக்க முடியும் என்று கேட்கிறார்.

Also read: 300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்.. முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்

அதற்கு அவர்களை இங்கே வந்து உன்னை பார்க்க சொல்லு, இல்லையென்றால் கோவிலில் போய் பாரு என்று முத்து கண்டிஷனாக சொல்லிவிடுகிறார். இங்கே என்ன நடக்கிறது என்று ஒண்ணுமே புரியாமல் மீனா மறுபடியும் தம்பிக்கு போன் பண்ணி மாமாக்கு உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அது அவர்கிட்டே போய் கேளு என்று தம்பி விதண்டாவிதமாக சொல்கிறார்.

அத்துடன் மாமா ரொம்பவே கோபமாக இருக்கிறார் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டார் என மீனா சொல்கிறார். அதற்கு மீனாவின் தம்பி அவர் சொன்னா அதை அப்படியே கேட்டிடணுமா என்ன. நீ வரலைன்னா என்ன நாங்க வந்து உன்னை பார்க்கிறோம் என்று சொல்லி போனை கட் பண்ணி விடுகிறார். இதற்கு அடுத்தபடியாக மனோஜ் வேற வேலை தேட போகிறார். அதற்கு கை செலவாக விஜயாவிடம் பணம் கேட்கிறார்.

விஜயா பணம் இல்லை என்று சொன்னதும் அப்பாவின் பாக்கெட்டில் இருந்து 300 ரூபாயை எடுத்துவிட்டு போய்விடுகிறார். அடுத்து மனோஜ் வேலை கிடைத்து விட்டது என்று வீட்டுக்கு வருகிறார். ஆனால் அதில் சேர வேண்டும் என்றால் 14 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று சொல்கிறார். இதனால் விஜயா ரோகிணியை டார்ச்சர் பண்ணி அந்த பணத்தை கேட்க போகிறார். பிறகு ரோகிணி பியூட்டி பார்லருக்கு உரிமையாளர் இல்லை என்ற உண்மை அண்ணாமலை மூலமாக குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வரப்போகிறது.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

Trending News