Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிரோடு வந்து தற்போது பிரச்சனை செய்வது தேவையில்லாத ஒரு கதையாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இந்த பிரச்சனையின் மூலம் கோபி, எழிலுக்கு ஒரு சிறந்த அப்பா என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.
அதாவது கணேசன் வீட்டிற்கு வந்து பிரச்சனை பண்ணும் பொழுது எல்லோரும் என்ன செய்வது என்று அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டார்கள். இதில் எழிலும் என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து போய் நிற்கும் நேரத்தில் கோபி ஒரு அப்பாவாக அவருக்கு அரவணைப்பு கொடுத்து ஆறுதலாக பேசினது ரொம்பவே உணர்வுபூர்வமான காட்சியாக இருந்தது.
அத்துடன் கணேசனுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக ஒவ்வொரு பாயிண்டையும் கொடுத்து அவரை வீட்டை விட்டு அனுப்பியதும் கோபி சிறந்த அப்பா என்பதை பார்க்க முடிந்தது. இதனை தொடர்ந்து ராதிகாவும், பாக்யா குடும்பத்திற்கு சப்போர்ட்டாக கணேசனுக்கு எதிராக நின்னு பேசினார். அடுத்தபடியாக கோபி ராதிகாவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்கியா கோபியிடம் பேச வருகிறார்.
அதாவது இப்படி ஒரு பிரச்சனை நடக்கும் பொழுது எனக்கு என்ன பண்ண வேண்டும் என்று தெரியாமல் திணறி போய் இருந்தேன். அந்த நேரத்தில் நீங்கள் மட்டும் எதுவுமே பேசாமல் இருந்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும். அந்த விதத்தில் நீங்கள் சப்போர்ட் செய்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் என்று கண்கலங்கப்படியே சொல்கிறார்.
உடனே கோபி, பாக்கியா இப்படி ஒரு பிரச்சனையை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள், நம்ம பையன நெனச்சு நீ வருத்தப்பட வேண்டாம். அமிர்தா நம்ம பையனை விட்டு போக போறது கிடையாது. எது நடந்தாலும் நம்ம பார்த்துக் கொள்ளலாம், நீ தைரியமா இரு என்று கோபி முதல் முறையாக பாக்யாவிடம் கரிசனம் காட்டி பேசி இருக்கிறார்.
அந்த வகையில் கோபி தற்போது பாக்கியாவையும் பிள்ளைகளையும் புரிந்து கொண்டார். அத்துடன் ராதிகாவும் திருந்தி விட்டார். இதனைத் தொடர்ந்து எப்படியும் அமிர்தா எழில்தான் ஒன்று சேர போகிறார்கள். அடுத்து ஜெனியும் செழியினை தேடி வந்து விடுவார். இப்படி எல்லா கதைகளும் சுமூகமாக முடியும் தருவாயில் பாக்கியலட்சுமி சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வரப் போகிறது.