பெங்களூரை பூர்வீகமாக கொண்ட பிரபல நடிகை தளபதி விஜயுடன் நடிப்பதற்கு கதை கூட கேட்க மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மகத், யாஷிகா, மாகாபா, மனோபாலா, பிரியங்கா மற்றும் கே எஸ் ரவிக்குமார் போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் ‘இவன் தான் உத்தமன்’.
இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாரா வெங்கடேஷ்.
தளபதியின் தீவிர ரசிகையாம், இவர் தளபதியுடன் நடிப்பதாக இருந்தால் கதை கூட கேட்க மாட்டேன் ஒப்புக்கொள்வேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் என்பதையும் தெரிவித்துள்ளார்.
24 வயதாகும் சாரா வெங்கடேஷ் பேராசைப்படுவதாகவும், இன்னும் ஒரு படம் கூட வெளிய வரல அதுக்குள்ள ஆசையைப் பாரு என ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த படத்திற்காக சிம்பு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2020-இல் வெளிவர வேண்டிய இந்த படம் கொரோனா ஊரடங்கு என தள்ளிப்போய் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. விரைவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.