வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

லவ் டுடே படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற இவானா.. விளம்பரத்தில் நடிக்க 4 கோடி சம்பளமா?

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது. அதில் ஹீரோயினாக நடித்திருந்த இவானாவுக்கு தற்போது கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இவர் நாச்சியார் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது.

அந்த வகையில் சமீப காலமாக தமிழ் திரையுலகில் இளம் நடிகைகளுக்கு பஞ்சமாகி வருகிறது. அதைப் போக்கும் வகையில் ரீ என்ட்ரி கொடுத்த இவானா ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதிலும் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறார். தற்போது அவர் நான்கு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அதில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்து வரும் அந்த படம் முடிவடைந்து விட்டது.

Also read: அக்கட தேசத்தில் வெளியான லவ் டுடே.. தலைகால் புரியாமல் ரசிகர் செய்த சம்பவம், ஜெர்க் ஆன இவானா

அதற்கு அடுத்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் முடிவடைய இருக்கிறது. இதற்காக அவர் 35 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் அவர் நடித்து நன்றாக சம்பாதித்து வருகிறார். ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளுக்கு விளம்பரப்பட வாய்ப்புகள் அதிக அளவில் குவியும்.

அதேபோன்று சினிமாவில் நடிப்பதை விட பல மடங்கு சம்பளமும் இதில் கிடைத்துவிடும். அதை நன்றாக புரிந்து கொண்ட இவானா விளம்பர படங்களின் மூலம் அதிகமாக கல்லா கட்டி வருகிறார். இவர் இப்போது நான்கு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அது மொத்தத்திற்கும் சேர்த்து இவர் 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Also read: 22 வயதில் படுக்கைஅறை காட்சி உங்க வீட்ல எப்படி ஒத்துக்கிட்டாங்க? அசரவைக்கும் பதில் அளித்த இவானா

அதில் இவர் நடித்த பான்ஸ் பவுடர் விளம்பரத்திற்கு மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம். மேலும் இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவரும் படத்தின் வெற்றியை பொறுத்து தன்னுடைய சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தவும் அவர் திட்டமிட்டு இருக்கிறாராம்.

அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகர்களின் பார்வை தற்போது இவானாவின் பக்கம் திரும்பி இருக்கிறது. அதனாலேயே இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இளம் நாயகியாக உருவெடுத்துள்ளார். மூத்த நடிகைகளே சினிமாவை ஆக்கிரமித்து உள்ள நிலையில் இவரின் வரவு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Also read: இளசுகளின் கனவு கன்னியாக மாறிய லவ் டுடே இவானா.. தம்மாத்துண்டு இடுப்பை காட்டி மயக்கிய புகைப்படங்கள்

Trending News