Jackie Chan: 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே உரிமையான சில விஷயங்கள் உண்டு. இதெல்லாம் எங்களுக்கானது மட்டும்தான் என உரிமையோடு இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி 90’s கிட்ஸ்களுக்கு மட்டுமே உரிமையான நடிகர் தான் சீனாவின் பிரபல நடிகர் ஜாக்கிசான்.
புரூஸ் லீ, ஜெட்லிக்கு பிறகு சீன நடிகர் ஒருவர் உலக அளவில் புகழ் பெற்றார் என்றால் அது ஜாக்கிசான் தான். தமிழ்நாட்டிற்கு ஜாக்கிசானை அறிமுகப்படுத்திய பெருமை விஜய் டிவிக்கு தான் சேரும். சனி, ஞாயிறு விடுமுறையிலும், கோடை விடுமுறை நாட்களிலும் விஜய் டிவியில் போடும் டப்பிங் படத்தை வைத்துத்தான் ஜாக்கி சான் நம்மிடம் அறிமுகமாகியது.
” நான் தான்டா மச்சி, வாழைக்காய் பஜ்ஜி” என்ற டயலாக்கை சீன நடிகர் ஒருவர் சொல்லி, பறந்து பறந்து அடிப்பார். அவர் சண்டை போட்டால், வயிறு குலுங்க சிரிக்கலாம். குழந்தைத்தனமான சிரிப்பு, சிக்ஸ் பேக் உடம்பு. இது எல்லாம் சேர்ந்தது தான் 90ஸ் கிட்ஸ்கள் ரசித்த ஜாக்கிசான்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜாக்கி சான் புரூஸ்லீயின் படங்களில் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்தார். சண்டை காட்சிகளில் உதவி செய்பவர் ஆக இருந்தோ பின்னாளில் சீன நாட்டின் பெரிய ஆக்சன் ஹீரோவாக மாறினார். சீனாவில் இருந்து ஒரு நடிகர் ஹாலிவுட் வரை பிரபலமானார் என்றால் அது இவர்தான்.
90ஸ் கிட்ஸ்களை தன்னுடைய ஆக்சன் கலந்த நகைச்சுவையால் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஜாக்கிசானுக்கு வயது 70. சமீபத்தில் இவர் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது.
நாம் படங்களில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக பார்த்த ஜாக்கிசானை வயதான தோற்றத்தில் பார்ப்பதற்கு நெருடலாக தான் இருக்கிறது. சின்ன வயதில் நாம் பார்த்து ரசித்தவர்கள் எல்லாம் இப்போது ஒரு குறிப்பிட்ட வயதை கடந்திருப்பதை பார்க்கும்போது நமக்கும் கொஞ்சம் வயதாகி தான் விட்டது போல என மனதுக்குள் நினைத்துக் கொள்ள தோன்றுகிறது.