ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

பிக் பாஸ் குள்ளநரிக்கு அடித்த ஜாக்பாட்.. புதிய படத்தில் கமிட்டான சீசன் 7 போட்டியாளர்

Season 7 contestant committed to new film: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் இறுதி கட்டத்தை அடைந்து விட்டது. மற்ற சீசன்களை கம்பேர் பண்ணும் போது இந்த சீசன் ஓரளவுக்கு தான் இருந்தது. அதற்கு காரணம் மாயா மற்றும் பூர்ணிமாவின் அலப்பறைகள். அதனாலேயே மக்களிடத்தில் அதிக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வெறுப்பை சம்பாதித்து விட்டார்கள்.

வெளியே மட்டுமில்லாமல் உள்ளேயும் சக போட்டியாளர்களை கேலி கிண்டல் செய்து, சிலரை ஊறுகாய் மாதிரி பயன்படுத்திக் கொண்டு டாப் இடத்திற்கு வந்து விட்டார்கள். இவர்கள் வெளியே வந்து பிறகு எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி எல்லாத்தையும் துடைத்து போட்டு இருவர்கள் சேர்ந்து அட்டகாசம் செய்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும் பட்சத்திலும் பிக் பாஸ் குள்ளநரியானா பூர்ணிமாவிற்கு ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. எப்போதுமே டைட்டில் வின்னர் ஆனவர்களுக்கு எந்த ஒரு விடிவுகாலமே பிறந்ததில்லை. அந்த வகையில் இப்பொழுது டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கும் இதுவரை எந்த ஒரு வாய்ப்பும் கிடைத்ததாக தெரியவில்லை.

Also read: வாழ்க்கை வாடி போற மாதிரி இருந்தா என்ன கூப்பிடு.. அர்ச்சனாவிற்கு திடீர் ட்விட் செய்த மாயா

ஆனால் உள்ளே இருந்து வெறுப்பை சம்பாதித்த பூர்ணிமாவிற்கு அடித்த ஜாக்பாட் என்னவென்றால் தற்போது வெள்ளி திரையில் கால் தடம் பதிக்கும் அளவிற்கு புதிய படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இயக்குனர் ஹரி மகாதேவன் இயக்கத்தில் கோவை பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பூர்ணிமா நடிக்கப் போகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கூடிய விரைவில் வெளிவரும் என்று ஒரு போஸ்டர் மூலம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். சும்மாவே வானத்துக்கும் பூமிக்கும் ஓவராக ஆட்டம் போடுவார். இப்போ பட வாய்ப்பு கிடைத்திருக்கு என்றால் காலில் சலங்கை கட்டாத குறையாக பேயாட்டம் ஆடப்போகிறார். இன்னும் இவரை வைத்து என்னவெல்லாம் கூத்து நடக்க போகிறது.

பாஸ்ட் இட் பாஸ்ட் என்பதற்கு ஏற்ப எல்லாத்தையும் மறந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அடுத்தடுத்து இவருக்கான ஒரு அங்கீகாரத்தை சினிமாவில் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் பூர்ணிமாவிற்கு கிடைத்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்த வேண்டும் என்று பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Also read: விரக்தியில் மனக்குமுறலை கொட்டி தீர்க்கும் பிக் பாஸ் மாயா.. இன்ஸ்டா-வில் போட்ட பதிவு

Trending News