வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சுனிதாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி வாயை மூட வைத்த ஜாக்கு.. நாரதர் வேலையை பார்த்த நாட்டாமை

Bigg Boss Tamil 8: பிக் பாஸில் மூன்றாவது வாரத்தை ஒட்டி நேற்று டிராமா குயின் தர்ஷா வெளியேறியிருக்கிறார். ஆனால் எந்த ஒரு போட்டியாளரும் வெளியேறிய பிறகு தான் இவருக்கு பதிலாக உள்ளே இருக்கும் இந்த போட்டியாளர் போயிருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி வருவது வழக்கம் தான். அந்த வகையில் தர்ஷாவுக்கு பதிலாக ஒண்ணுமே பண்ணாமல் மிக்சர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சௌந்தர்யாவை வெளியே அனுப்பி இருக்கலாம் என கமெண்ட் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் நேற்று தர்ஷா வெளியேறும் போது சும்மா போகாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் கொளுத்தி போடும் விதமாக பெண்களிடம் அணியிடம் குரூப்சிம் இருக்கிறது என்ற உண்மையை உடைத்து விட்டு போய்விட்டார். உடனே வீட்டுக்குள் இருக்கும் பெண்கள் அணியில் ஆனந்தி, அன்சிதா, ஜாக்லின், சுனிதா அனைவரும் சேர்ந்து தர்ஷா சொல்லிட்டு போன குரூப்சிம் பற்றி பேசுகிறார்கள்.

அப்பொழுது இந்த குரூப்பில் நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஜாக்லின் இதிலிருந்து தள்ளி வருகிறார். அந்த சூழ்நிலையில் சாச்சினாவுக்கும் சுனிதாவிற்கும் சண்டை ஆரம்பம் ஆகிறது. உடனே சாச்சினாவுக்கு எதிராக அன்சிதா பேச ஆரம்பிக்கிறார். இதை பார்த்த ஜாக்லின் அன்சிதாவிடம் நீயும் தான் குரூப்சிம் பண்ணுகிறாய் என்று சில உதாரணத்தை சொல்லுகிறார்.

உடனே அன்சிகாவிற்கு சப்போர்ட்டாக சுனிதா ஜாக்குலின் இடம் சண்டை போடுகிறார். அதற்கு ஜாக்லின், நான் உன்னிடம் எதுவுமே பேசவில்லை நான் அன்சிதாவிடம் தான் பேசுகிறேன் என்று சொன்னாலும் சுனிதா வாயை மூடாமல் தொடர்ந்து மூக்கை நுழைத்து பேச ஆரம்பித்து விட்டார். உடனே ஜாக்லின் இதுதான் குரூப்சிம் என்று சுட்டிக் காட்டுகிறார்.

அதற்கு சுனிதா, நான் அவளுக்காக பேச தான் செய்வேன் என்று தேவையில்லாத சண்டைக்கு முன்னாடி போய் நிற்கிறார். உடனே ஜாக்லின், நீ இந்த வீட்டில மேக்கப் போட்டுக்கிட்டு சும்மா ஜால்ரா போட்டு மட்டும்தான் இருக்கிறாய். மற்றபடி வேறு எதுவும் பண்ணவில்லை என்று சுனிதாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் அளவிற்கு பேசி வாயை அடைக்க வைத்து விட்டார்.

கடைசியில் ஜாக்லின் சொன்னது உண்மைதான் என்பதற்கு ஏற்ப சுனிதாவால் எதுவும் பேச முடியாமல் அன்சிதா உடன் ஜாக்லினின் நக்கல் அடிக்க ஆரம்பித்து விட்டார். இதை பார்த்து தாங்க முடியாத ஜாக்லினின் கடைசியில் தனியாக உட்கார்ந்து வழக்கம் போல் அழ ஆரம்பித்து விட்டார்.

பிறகு பெண்கள் அணியில் நாட்டாமையாக இருக்கும் ஆனந்தி கொளுத்தி போடும் விதமாக இந்த ஜாக்லின் நேற்றிலிருந்து இப்படித்தான் இருக்கிறார் என்று நாரதர் வேலையை பார்த்து அங்கு இருக்கும் பெண்கள் அணியை ஜாக்லினுக்கு எதிராக திருப்பி விட்டார்.

ஆனால் இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படும் மிக்சர் சௌந்தர்யா இதெல்லாம் தேவைதான் நல்லா அடிச்சுக்கோங்க என்று ஆண்கள் அணியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே மாதிரி பெண்கள் அணிக்கு வந்த விஷால் நான் இந்த வம்பு தும்புகே வரவில்லை என்று வெளியேவே இருந்து வேடிக்கை பார்த்து வருகிறார்.

Trending News