இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது ஹர்திக் பாண்டியாவின் இடம். இவர் சமீப காலமாக இந்தியாவின் ஆல்ரவுண்டர் இடத்தை தன் கைவசம் வைத்துள்ளார். அதிரடியாக ஆடக்கூடிய இவர் பந்து வீச்சிலும் அசத்துவார். ஓராண்டிற்கு முன் இவருக்கு முதுகில் செய்த ஆபரேஷன் காரணமாக தற்போது பந்து வீச முடியவில்லை, பந்து வீசுவதும் இல்லை.
ஹர்திக் பாண்டியா பந்து வீசாமல் விளையாடி வருவதால் பல வீரர்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் சமீப காலமாக சொதப்பி வருகிறார். இதனால் தற்போது நடக்கவிருக்கும் உலகக் கோப்பையில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
பந்து வீசாமல் ஹர்திக் பாண்டியா அணியில் இருப்பது வீண் என்றும், 20 ஓவர் போட்டி பொருத்தவரை ஆறாவது பேட்ஸ்மேன் தேவை இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். மேலும் அவர் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் பணியை இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் ரவீந்திர ஜடேஜா அனைத்துப் போட்டிகளிலும் களமிறங்குவார். அதனால் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் இடத்திற்கு எந்த ஒரு பெரிய பாதிப்பும் வரப்போவதில்லை என்று கூறுகிறார் அஜித் அகர்கர்.