வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நம்ம ஜாஃபர் சாதிக்கின் காதலியை பார்த்து பொறாமைப்படும் ஹீரோயின்கள்.. தெறிக்க விடும் புகைப்படம்

Jaffer Sadiq Girl Friend: கடந்த பத்தாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் படத்தின் நிறைய கேரக்டர்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், படத்தின் வில்லனாக நடித்திருந்த விநாயகம் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்திருந்தார்கள். அதே வரிசையில் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்பை பெற்ற நடிகர் தான் ஜாஃபர் சாதிக்.

பாவ கதைகள் என்னும் தலைப்பில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய கதையில் வில்லனாக நடித்திருந்தவர் தான் இந்த ஜாஃபர் சாதிக். அந்த கதையிலேயே ரசிகர்களின் கவனத்தை அதிகமாக இவர் ஈர்த்துவிட்டார். அதற்கு முக்கிய காரணம் அவருடைய தோற்றம் மற்றும் வித்தியாசமான நடிப்புதான்.

Also Read:ஜெயிலர் 4வது நாள் வசூலை பார்த்து இந்த வார ரிலீஸையும் தள்ளி போடும் திரையுலகம்.. உலகளவில் ரஜினி செய்த சாதனை

அதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜால் கவனிக்கப்பட்ட இவர் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். தன்னிடம் சண்டை போடுபவர்களின் கால் நரம்பை வெட்டிவிடும் வழக்கம் உடைய இவர் கமலஹாசனின் கால் நரம்பை வெட்டுவது போல் ஒரு காட்சி அமைந்திருக்கும். அப்போது கமல் கொடுக்கும் ரியாக்ஷன் மற்றும் வசனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அந்த காட்சியின் மூலம் நடிகர் ஜாஃபர் சாதிக்கும் நல்ல பெயரை ரசிகர்களிடம் பெற்றார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்கள் திடீரென அறிமுகமாகி, பயங்கர வைரல் ஆவதுண்டு. அப்படித்தான் தற்போது இவரும் வைரல் ஆகி வருகிறார். அதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் படம் தான்.

Also Read:விஜய்யின் வாழ்நாள் சாதனையை செஞ்சு விட்ட ஜெயிலர்.. ரஜினியின் அசர வைக்கும் ரெக்கார்ட்

இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது ஜாஃபரின் காதலியின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஜாஃபரின் காதலி நல்ல அழகாக இருப்பதாக நெட்டில் செல்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஜாபர் இவருடைய புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு பகிர்ந்து இருக்கிறார்.

                                                                   ஜாபர் சாதிக் பகிர்ந்திருக்கும் புகைப்படம்

ஜாஃபரின் காதலியின் பெயர் சித்திக்கா ஷெரின் என்றும், அவர் ஒரு டான்சர் என்றும் சொல்லப்படுகிறது. புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கும் ஜாஃபர் இவர்தான் தன்னுடைய காதலி என்று அதிகாரப்பூர்வமாக எதுவும் பகிரவில்லை. இருந்தாலும் தற்போது சித்திகா ஷெரின் தான் ஜாஃபரின் காதலி என நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Also Read:கலாநிதியை உச்சி குளிர வைத்த நெல்சன்.. விட்டதைப் பிடித்த சன் பிக்சர்ஸ்

Trending News