திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரபாஸுக்கு வில்லனாக ரஜினி பட நடிகர்.. மூக்கில் வளையம், கொலைவெறி பார்வை என வைரலாகும் போஸ்டர்

இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் படங்களில் பிரபாஸ் படங்கள் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்கள் ரெடியாகிக் கொண்டிருக்கின்றன.

இதில் ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதனை தொடர்ந்து கேஜிஎப் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் என்ற இயக்குனருடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பயங்கர அடிதடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்தப் படமும் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். மேலும் இந்த படத்தில் முதன்முதலாக பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

அதிரடி படங்களுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் எப்பவுமே முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் சலார் படத்தில் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தார்களாம்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. இதனால் வழக்கம்போல் தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் ஜெகபதி பாபு இந்த படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இவரது ஆக்ரோஷமான அனைத்தும் கலந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

கண்டிப்பாக கேஜிஎப் படத்தில் இடம்பெற்ற கருடன் மற்றும் ஆதிரா போன்ற வில்லன்களைப் போல ஜெகபதிபாபுவின் ராஜமன்னார் கதாபாத்திரமும் செம ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jagabathi-babu-salaar-cinemapettai
jagabathi-babu-salaar-cinemapettai

Trending News