திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஜகமே தந்திரம் OTT விலை என்ன தெரியுமா? கோடிக்கணக்கில் காசு கொட்டுனா அப்புறம் எதுக்கு தியேட்டர் ரிலீஸ்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். ஆனால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது தனுஷுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் தயாரிப்பாளர் முடிவு என்பதால் தன்னுடைய எதிர்ப்பை மட்டும் காட்டி விட்டு விலகிவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை வெளியான ஜகமே தந்திரம் டீஸரை தற்போது வரை தனுஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதிலிருந்தே எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்துள்ளது என்பது தெரியவருகிறது.

ஆனால் ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகுமார் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் படத்திற்கு தியேட்டர் காரர்களை விட நல்ல லாபம் வந்ததால் கொடுத்து விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை சுமார் 55 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம். இதுவரை இந்தியாவில் வெளியான படங்களில் அதிக விலைக்கு கைமாறின OTT படம் என்றால் அது ஜகமே தந்திரம் தான் என்றும் கூறுகின்றனர்.

அமேசான் தளத்தில் வெளியான சூரரைப்போற்று படம் கூட ஜகமே தந்திரம் படத்தின் விலையை விட குறைவுதான் என்கிறார்கள் டிரேடிங் வட்டாரங்கள். மேலும் விஜய் டிவிக்கு சேட்டிலைட் ரைட்ஸ் விற்றதன் மூலம் 15 முதல் 20 கோடி வந்துள்ளதாம்.

jagame-thandhiram-netflix
jagame-thandhiram-netflix

இதன் காரணமாக ஜகமே தந்திரம் படத்தின் பட்ஜெட் 60 கோடியை விட 10 கோடி ஏற்கனவே அதிக லாபம் வந்து விட்டதாக கூறுகிறார்கள். இப்படி கோடிக்கணக்கில் லாபம் வந்தால் பிறகு எதற்கு தியேட்டர் செல்லப் போகிறார்கள் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். ஆனால் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை பார்த்துவிட்டு ரசிகர்கள் தியேட்டரில் வெளியிட வேண்டிய படத்தை போய் OTT தளத்தில் வெளியிடுகிறார்கள் என புலம்பித் தள்ளி விட்டனர்.

Trending News