திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. கர்ணனுக்கு அப்புறம் தானா, போடு மஜாதான்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் பஞ்சாயத்து இன்னமும் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் ஜகமே தந்திரம் ரிலீஸ் விவகாரத்தில் தனுஷ் அதிருப்தியில் இருப்பதுதான்.

தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவான படம் ஜகமே தந்திரம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். கேங்ஸ்டர் கதையில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

விஜய்யின் மாஸ்டர் படம் வெளியான போது கூட தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விரைவில் ஜகமே தந்திரம் படத்தை திரையரங்குகளில் கொண்டாடுவோம் என்ற தகவலை ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் தியேட்டரில் வெளியிட்டால் ஜகமே தந்திரம் படம் எதிர்பார்த்த கலெக்சன் வருமா என யோசித்த படத்தின் தயாரிப்பாளரான ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகுமார் நேரடியாக ஜகமே தந்திரம் படத்தை கிட்டத்தட்ட 55 கோடிக்கு நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு விற்றுவிட்டார்.

jagame-thandhiram-cinemapettai
jagame-thandhiram-cinemapettai

இது தனுஷுக்கே பெரும் அதிர்ச்சி தான். இது சம்பந்தமாக தயாரிப்பாளரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் தற்போது வரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை கூடவே பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் வருகின்ற மே 1ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாம். கடந்த வருடம் மே மாதம் 1ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவிருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் சரியாக ஒரு வருடம் கழித்து அதே தேதியில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பே ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News