கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளிவந்தது ஜகமே தந்திரம். தனுஷின் ஹாலிவுட் மார்க்கெட் வரை இந்த படம் விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்த படத்தினால் தனுஷிற்கு ஹாலிவுட் அளவில் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது, எந்த அளவிற்கு பில்டப் செய்தார்களோ அந்த அளவிற்கு படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்துள்ளது.
தயாரிப்பாளர் லாபத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்று தான் கூற வேண்டும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது முதல் பாகத்தின் முடிவில் இரண்டாம் பாகம் வர மாதிரி ஒரு வசனம் வைத்துள்ளனர். போர் ஆரம்பிக்க மட்டும் தான் முடியுமாம், அவன் வேற திரும்பி வருவானாம் என்று.. அப்போ செகண்ட் பார்ட் வேற வருதா இந்த பூமி தாங்காது சாமி என்பது போன்ற நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
படம் வெளிவருவதற்கு முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக எடுப்போம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு தனுஷ் கண்டிப்பாக எடுக்கலாம் என்றும் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் பட்சத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் தயவு செய்து தனுஷ் கேங்ஸ்டர் படங்களில் நடிக்க வேண்டாம் என்பதே அவர்களின் கோரிக்கை.
