தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் முதன்முதலில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். இன்று படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்று வருகிறது.
ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் பக்கா தியேட்டர் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் ஓடிடியில் வெளியாவது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஏன் தனுஷுக்கே வருத்தம்தான்.
இது ஒருபுறமிருக்க எப்போதுமே நெட்டிசன்கள் புதிதாக டிரைலர்கள் மற்றும் டீசர்கள் போன்றவை வந்தால் அவற்றை வேறு ஒரு படத்துடன் ஒப்பிட்டு கண்டுபிடித்து போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரையும் ஜூங்கா படத்துடன் ஒப்பிட்டு கூறுகின்றனர்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் கோகுல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜூங்கா. இதுவும் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம் தான். இதில் விஜய் சேதுபதி நக்கல் நையாண்டி கலந்த அசத்தல் டான் போல நடித்திருப்பார்.
அதைப்போன்ற கதாபாத்திரத்தில் தான் தனுஷூம் நடித்துள்ளாராம். இதைப் பார்க்கும்போது நெட்டிசன்கள், தனுஷுக்கும் விஜய் சேதுபதி போல் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது எனக் கூறுகின்றனர்.
ஆனால் அவரோ, ஏற்கனவே நான் பெரிய நடிகன்டா என படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார். நெட்டிசன்கள் எப்போதுமே ஒரு சில காட்சிகளை வைத்துக்கொண்டு அந்த படத்தையே மொத்தமாக காப்பியடித்து எடுத்தது போல் சித்தரித்துக் காட்டுவது ஒன்றும் புதியதல்ல.
