திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

3000 தண்டால் எடுக்கும் புரூஸ்லி யார் தெரியுமா.? தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டிய எம்ஜிஆர்

தங்கப்பழம் என்ற பெயருக்கு சொந்தக்காரர் தான் ஜாக்குவார்தங்கம். 6 வயதில் சிலம்பு பயிற்சி கற்றுக்கொண்ட இவரை சிலம்பில் யாரும் வென்றுவிட முடியாது. அந்த அளவிற்கு சிறப்பாக சிலம்பு கற்றுக் கொண்டுள்ளார்.

எம்ஜிஆர் கண்டெடுத்தவர் தான் இந்த ஜாகுவார் தங்கம் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதுவரை சிறந்த சண்டை இயக்குனருக்காக 5 முறை கோல்ட் மெடல் வாங்கி உள்ளார்.

அந்த அளவிற்கு சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்துள்ளார் ஜாகுவார் தங்கம். இவரை படத்தில் பணியாற்றுவதற்காக இயக்குனர்கள் பலமுறை கூப்பிடுவார்கள் அந்த அளவிற்கு வரிசையாக அப்போது பல படங்கள் கையில் வைத்துள்ளார்.

jaguar thangam
jaguar thangam

ஒருமுறை 35 நாட்கள் காலை முதல் இரவு வரை ஓய்வு இல்லாமல் பணியாற்றியுள்ளார். இவர் எப்போதும் வீட்டிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு காரில் வர போது தான் தூங்குவாரம். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3000 தண்டால்களை எடுப்பாராம் ஜாகுவார் தங்கம்.

சிலம்பத்தில் கிட்டத்தட்ட 4  மாநில விருது வாங்கி உள்ளார். கிட்டத்தட்ட அனைத்து உச்ச நட்சத்திரங்கள்வுடனும் பணியாற்றிய அனுபவம் உள்ள ஒரே ஒருவர் ஜாக்குவார்தங்கம். அந்த அளவிற்கு அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

Trending News