வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

150 முறை விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கேட்ட ஜெய்.. தளபதி மறுத்த காரணம் இதுதானாம்

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பகவதி படத்தில் விஜய்க்கு சகோதரனாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய். அதன் பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள ஜெய் தற்போது தமிழ் சினிமாவில் மினிமம் பட்ஜெட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

2021ஆம் ஆண்டு கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஜெய்யும் ஒருவர். இதுவரை நடிகராக மட்டுமே வலம் வந்த ஜெய் தற்போது இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் அவரது 30வது படமாக உருவாகியுள்ள சிவசிவா படத்தின் மூலம் ஜெய் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட ஜெய் நடிகர்கள் விஜய் மற்றும் சிம்பு குறித்து பேசினார். அவர் கூறியதாவது, பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்டல்ல. அப்புறம் ஏன். என்று கேட்டு மறுத்து விட்டார் என கூறினார்.

jai
jai

நடிகர் ஜெய் வாழ்வில் காதல் வந்ததும், தற்போது அந்த உறவில் முறிவு ஏற்பட்டதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் ஜெய்யிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.

அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார். நடிகர் சிம்புவிற்கு ஏற்ற பெண்ணை வீடடில் தேடி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அடுத்தாண்டு திருமணம் நடைபெறும் என ஜெய் கூறியுள்ளது சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News