காதல் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கும். அந்த நம்பிக்கையில் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் தீராக்காதல். லைக்கா ப்ரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் இன்று வெளியாகி உள்ளது.
ஏற்கனவே வெளியாகியிருந்த இதன் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்திற்கு இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இப்படம் ஜெய்க்கு வெற்றியை கொடுக்குமா என்பதை இங்கு விரிவாக காண்போம். வழக்கமாக நாம் பார்த்து ரசித்த காதல் கதை தான் என்றாலும் இதில் இருக்கும் யதார்த்தம் ஆடியன்ஸை கவர்ந்துள்ளது.
Also read: மீண்டும் மீண்டும் மரண அடி வாங்கிய விஜய் சேதுபதி.. ஐஸ்வர்யா ராஜேஷிடம் அசிங்கப்பட்ட கொடுமை
கதைப்படி ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கல்லூரி காலத்தில் காதலித்து பிரிந்தவர்கள். அதன் பிறகு எட்டு வருடம் கழித்து இருவரும் சந்திக்க நேரிடுகிறது. அதில் ஜெய்க்கு ஷிவதாவுடன் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. அதேபோன்று ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுமைக்கார அஜ்மத்தை திருமணம் செய்து படாத பாடு பட்டு வருகிறது.
இருவரும் வேலை நிமித்தமாக சந்திக்க நேரும் சமயத்தில் பழைய காதல் நினைவுக்கு வருகிறது. அதை தொடர்ந்து இருவரும் சிரித்து பேசுவது, ஊர் சுற்றுவது என இருக்கிறார்கள். ஆனால் தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என புரிந்து கொள்ளும் ஜெய் முன்னாள் காதலியை விட்டு பிரிகிறார். அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் கணவனுடன் சண்டை போட்டு பிரிந்து ஜெய்யின் வீட்டுக்கு எதிரிலேயே குடி வருகிறார்.
Also read: இப்படியே போனா தலை தப்பாது.. விஜய் சேதுபதி போல ஐஸ்வர்யா ராஜேஷால் ஓட்டம் பிடித்த தியேட்டர் ஓனர்கள்
மேலும் தன் பழைய காதலை மீட்டெடுக்கவும் முயல்கிறார். இப்படி மனைவியா, காதலியா என்ற சிக்கலில் மாட்டி தவிக்கும் ஜெய் என்ன செய்வார், முடிவு என்ன என்பது தான் தீராக்காதலின் கதை. ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜெய்யின் நடிப்பு பழைய சூர்யாவை ஞாபகப்படுத்துகிறது. காதலன், கணவன், அப்பா என தன் கதாபாத்திரத்திற்கு அவரின் நடிப்பு நியாயம் சேர்த்திருக்கிறது.
அதே போன்று அக்மார்க் குடும்ப தலைவனாகவும், காதலியும் கஷ்டத்தை கேட்டு உருகுபவராகவும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது கொடுமைக்கார கணவனிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படுவதும் ஜெய்யை மீண்டும் அடைய நினைப்பதும் என அவர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அதேபோன்று தன் கணவனின் மீது அன்பு கொள்ளும் சராசரி மனைவியாகவும், எங்கே அவர் தன்னை விட்டு பிரிந்து விடுவாரோ என சந்தேகம் கொள்ளும் காட்சியிலும் ஷிவதா கைதட்டலை பெறுகிறார். இவ்வாறாக நகரும் கதை வேறு கோணத்தில் சென்று விடக்கூடாது என்பதையும் இயக்குனர் தெளிவாக மனதில் வைத்து காட்சிகளை நகர்த்தி இருக்கிறார். இப்படி படத்தில் நிறைகள் இருந்தாலும் சில காட்சிகள் தேவையற்றதாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் இந்த தீராக்காதல் ரசிகர்களுக்கு நிறைவாக உள்ளது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5