Baby and Baby: சத்யராஜ் மற்றும் ஜெய் காம்போவில் உருவாகி இருக்கும் படம் தான் பேபி அண்ட் பேபி. ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே படத்தை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
காரணம் இந்த படம் ராம்கி நடித்த ஒரு பழைய படத்தின் சாயலில் இருப்பது தான்.
ட்ரெய்லரின் ஆரம்பத்தில் ஜெய் தன்னுடைய மனைவியுடனும், யோகி பாபு அவருடைய மனைவியுடனும் ஒரே விமானத்தில் பயணிக்கிறார்கள்.
பேபி அண்ட் பேபி ட்ரைலர்
அப்போது குழந்தை எதிர்பாராத விதமாக மாறிவிடுகிறது. குழந்தைக்கு எடைக்கு எடை காசு போடும் விழாவிற்காகத்தான் சத்யராஜ் மகன் ஜெய் மற்றும் அவரது மனைவியை வெளிநாட்டிலிருந்து வர வைக்கிறார்.
சத்யராஜுக்கு உள்ளூரில் எதிரிகள் கொஞ்சம் அதிகமாக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வழியில் சத்யராஜை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
குழந்தை மாறியதால் யோகி பாபு ஜெய் வீட்டுக்கு வந்து விடுகிறார்.
ஜெய்யின் மனைவி மற்றும் யோகி பாபுவின் மனைவி யாருக்கும் தெரியாமல் தங்களுக்கு சொந்தமான குழந்தையை கொஞ்சுவது போன்ற காட்சிகளும் இருக்கிறது.
விழா கோலாகலமாக சென்று கொண்டிருக்கும்போது சத்யராஜின் எதிரிகள் குழந்தையை கடத்திவிட்டு போய்விடுவதுதான் படத்தின் கதை.
இந்த கதையை எங்கேயோ கேட்ட மாதிரி 90 கிட்ஸ்களுக்கு இருக்கும். இது ராம்கி மற்றும் விவேக் இணைந்து நடித்த எனக்கு ஒரு மகன் பிறப்பான் கதை தான்.
அம்மா வடிவுக்கரசிக்கு பெண் குழந்தை பிடிக்காது என்பதால் நண்பன் விவேக்கின் ஆண் குழந்தையை ராம்கி தன்னுடைய வீட்டிற்கு வந்து கொண்டு வந்து விடுவார்.
அதன் பின்னால் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையோடு சொல்லி இருப்பார்கள். அதையே தான் கொஞ்சம் பக்கி டிக்கெரிங் பண்ணி இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.