வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிரபல இயக்குனருடன் 8 வருடம் கழித்து இணையும் ஜெய்.. இந்த வாட்டியும் பிளாக்பஸ்டர் கன்பார்ம்

விஜய்யின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜெய். அதனைத் தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து மினிமம் பட்ஜெட் படங்களை கொடுத்த ஜெய் சமீபகாலமாக தன்னுடைய கதை தேர்வில் சொதப்பி ஒரு வெற்றி கூட கொடுக்காமல் தடுமாறி வருகிறார். மேலும் இவரது படங்களில் 18 பிளஸ் காட்சிகள் அதிகமாக இடம்பெறுகின்றன.

ஒரு காலத்தில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்த ஜெய் சமீப காலமாக அந்த லிஸ்டில் இருந்து விலகிவிட்டார். இதனால் எப்படியாவது ஒரு வெற்றி கொடுக்க வேண்டுமென தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

ஜெய்யின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம். நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவரது வெகுளித்தனமான கதாபாத்திரம் ஹிட்டடித்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அட்லீ படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த முறை அட்லீ அந்த படத்தை இயக்கவில்லை. அட்லீ தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது.

மேலும் இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் இயக்க உள்ளாராம். அட்லீ இதுவரை அந்த காரம், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

jai-atlee-combo-back-cinemapettai
jai-atlee-combo-back-cinemapettai

Trending News