வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முதல் இரவில் குறட்டை விட்டு தூங்கிய மணிகண்டன்.. கலக்கலான காமெடி உருவான குட் நைட்

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் ஜெய் பீம். சூர்யா நடிப்பில் வெளியான இந்த படத்தில் மணிகண்டன் ராசாகண்ணு என்ற கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிகண்டனுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.

அந்த வகையில் மணிகண்டன் நடிப்பில் குட் நைட் என்ற படம் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் ரமேஷ் திலக், பக்ஸ், மீதா ரகுநாத் ஆகியோர் நடித்துள்ளனர். விநாயகர் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்த எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Also Read : ரகுவரனாக மாறிய ஜெய்பீம் ராஜாக்கண்ணு.. இந்த மனுஷனுக்குள்ள இப்படி ஒரு திறமையா.? புல்லரிக்க வைத்த சம்பவம்

இந்த படம் நாளை வெளியாக உள்ளது. படத்தின் கதை என்னவென்றால் புதிதாக திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி முதலிரவு அறைக்கு செல்கின்றனர். பல கனவுகளுடன் சென்ற பெண்ணுக்கு அங்கு ஏமாற்றம் கிடைக்கிறது. கணவர் குறட்டை விட்டு தூங்குகிறார். குறட்டை விடுகிற கணவனுக்கும் துரதிர்ஷ்டவசமான மனைவி என்று அழைக்கப்படுபவருக்கும் இடையே உணர்வுபூர்வமான படமாக குட் நைட் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இப்படம் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் எப்படி அசத்தி இருந்தாரோ, அதேபோல் இந்த படத்திலும் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் படத்தின் கதாநாயகி மீதா ரகுநாத் கடந்த ஆண்டு வெளியான முதலும் நீ முடிவும் நீ படத்தில் நடித்திருந்தார்.

குட் நைட் படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இருக்கக்கூடும். மேலும் சமீபத்தில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : தத்துரூபமா இருக்கனும் என உயிரைக் கொடுத்து நடிக்கும் 5 நடிகர்கள்.. ராஜா கண்ணாக ஜெயித்து காட்டிய மணிகண்டன்

Trending News