வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரகுவரனாக மாறிய ஜெய்பீம் ராஜாக்கண்ணு.. இந்த மனுஷனுக்குள்ள இப்படி ஒரு திறமையா.? புல்லரிக்க வைத்த சம்பவம்

சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அப்படம் சில எதிர்ப்புகளை சந்தித்தாலும் பல விருதுகளையும் வாங்கி குவித்து சாதனை படைத்தது. அதில் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மணிகண்டன்.

இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் இவர் இப்போது குட் நைட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கும் இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் இப்போது ஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் மணிகண்டன் பட குழுவினருடன் கலந்து கொண்டுள்ளார்.

Also read: ராம் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரகுவரன் கெட்டபுக்காகவே வாரி வழங்கிய விஜய் டிவி

அப்போது அவர் தன்னிடம் இருக்கும் ஒரு திறமையை வெளிப்படுத்தியதை பார்த்த பலரும் இப்போது வாயடைத்து போய் இருக்கின்றனர். அந்த அளவுக்கு அவர் அஜித், விஜய் சேதுபதி, ரகுவரன் போன்ற நடிகர்கள் போல் மிமிக்ரி செய்து மேடையையே கலகலக்க வைத்து விட்டார். அதிலும் அஜித்தின் குரல் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் எப்படி இருக்கும் என்பதை அவர் இயல்பாக பேசியது ரசிக்கும் வகையில் இருந்தது.

அதைத்தொடர்ந்து மிகப்பெரும் ஜாம்பவானான ரகுவரன் போன்று அவர் பேசியது அனைவரையும் புல்லரிக்க வைத்து விட்டது. அந்த வகையில் பாட்ஷா, முதல்வன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களில் எந்த அளவுக்கு அவரின் குரல் மாறுபட்டு இருக்கும் என்பதை அவர் தெள்ளத் தெளிவாக பேசி காட்டினார்.

Also read: அடுத்த ரகுவரன் நீங்கதான் சார்.. சிம்பு பட பிரபலத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

இதனால் அந்த மேடையே கைதட்டலால் அதிர்ந்தது. மேலும் இந்த மனுஷனுக்குள் இப்படி எல்லாம் திறமை இருக்கிறதா என்று நம்மை ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது அவருடைய இந்த மிமிக்ரி வீடியோ தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களும் அவருடைய திறமையை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர் காலா திரைப்படத்திலும் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அவரின் குட் நைட் திரைப்படமும் வெற்றியடைய வேண்டும் என இப்போதே வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

Also read: ரோகினிக்கு முன்பே பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

Trending News