வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிம்புக்கு பிறகுதான் எனக்கு கல்யாணம்.. வெளிப்படையாக போட்டு உடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக துவங்கி காதல் அழிவதில்லை படத்தின் வாயிலாய் தனனை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என பன்முகத்தன்மை கொண்ட சிலம்பரசன் சிம்பு என்கிற STR. பல்வேறு பிரபலங்களும் இவரைப்பற்றி மேடையில் பேசியதுண்டு அந்த பட்டியலில் இணைகிறார் நடிகர் ஜெய்.

தமிழ் சினிமா பத்திரிக்கையாளர்கள் நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவரது பானியில் சிரித்துக்கொண்டே பதிலளித்து வந்தார்.

பகவதி படத்தில் தளபதியின் தம்பியாக அறிமுகமானேன் அதற்கு பிறகு 150 முறை அவருடன் இன்னொரு படம் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டிருந்தேன் ஆனில் தளபதியோ நீ தான் இப்போ ஹீரோவாகிவிட்டாயே என கூறினார் என்று பேசினார்.

jai
jai

இப்போது ஹீரோ வில்லன் என இரு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் படங்களில் நடித்து வருகிறார் ஜெய்.

பிசியான செட்யூலிலேயே வலம் வருகிறீர்களே கல்யாணம் எப்போது என்று கேட்டதற்கு சிம்புவின் கல்யாணத்துக்கு பிறகு தான் என கூறினார். மேலும் அடுத்த வருடத்தில் சிம்புவுக்கு திருமணம் செய்வதாக அவர் வீட்டில் பேசப்படுவதாகவும் அதனை தொடர்ந்து தனக்கும் நடக்கும் என்றும் கூறினார் நடிகர் ஜெய். இப்படியான ஒரு அப்டேட்டை எதிர்பாராத சிம்பு ரசிகர்கள் இப்போது கொண்டாடி வருகின்றனர்.

Trending News