வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வீச்சருவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட ஜெய்.. மிரட்டலாக வெளிவந்த சுசீந்திரன் பட பர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து தற்போது பல இயக்குனர்களும் ஜெய்யை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தின் மூலம் அறிமுகமான ஜெய் முதல் படத்திலேயே வெற்றி கண்டார். அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 600028 படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமானார். சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.

அதன் பிறகு ஜெய் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது ராஜா ராணி படத்தில் நடித்து வெற்றி கண்டார். ஜெய் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார் பார்ட்டி குற்றமே குற்றம் கோபி நைனார் இயக்கத்தில் ஒரு படத்திலும் பர்த்டே இயக்கத்தில் ஒரு படத்திலும் சுந்தர்சி இயக்கத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் சுசீந்திரன் இயக்கும் படத்திற்கு சிவசிவா என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது இப்படத்தில் ஜெய் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது அதில் ஜெய் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் கோபமாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

siva-siva-jai
siva-siva-jai

இப்படம் ஜெயிக்க 30 படம் என்பதால் ஜெய் இப்படத்தில் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News