செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

2 ஹீரோயின்களுடன் ஜெய்யின் தீராக்காதல்.. எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆரம்பத்தில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்த ஜெய் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. அதிலும் கடைசியாக அவர் நடித்திருந்த காபி வித் காதல் திரைப்படம் படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அதனாலேயே அவர் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என தீவிரம் காட்டி வந்தார்.

அந்த வகையில் தற்போது அவர் லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது ஜெய்யை வைத்து தீராக்காதல் என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது.

Also read: காலங்கள் தாண்டியும் பேசப்படும் கமலின் 5 படங்கள்.. பார்ட் 2-க்காக ஏங்க வைத்த தேவர் மகன்

ரோகின் இயக்கும் இப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஜெய்யுடன் இணைந்திருப்பது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோன்று நெடுஞ்சாலை, அதே கண்கள் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷிவதாவும் இப்படத்தில் இணைந்திருப்பது ஆவலை மேலும் தூண்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டரை பார்க்கும் போது படம் முக்கோண காதல் கதை அம்சத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.

Also read: கம்பேக் கொடுக்க மாட்டாங்களா என ஏங்க வைத்த 5 ஹீரோயின்கள்.. இருக்கும் இடம் தெரியாமல் போன விஜய் பட ஹீரோயின்

அது மட்டுமல்லாமல் போஸ்டரில் இருக்கும் மூவரும் சோகத்துடன் இருப்பதை பார்த்தால் த்ரில்லர் கலந்த கதையாக இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இப்படி உச்சகட்ட ஆர்வத்தை தூண்டி இருக்கும் இந்த திரைப்படம் ஜெய்க்கு சூப்பர் ஹிட் படமாக அமைய வேண்டும் என ரசிகர்கள் இப்போதே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தீராக்காதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

jai-theerakadhal
jai-theerakadhal

மேலும் அஜித், ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து படங்களை தயாரித்து வரும் லைக்கா இப்போது வளர்ந்து வரும் ஹீரோக்களை வைத்தும் படங்களை தயாரிப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: சூரிக்கு குவியும் அடுத்தடுத்த வாய்ப்புகள்.. மறைமுகமாக உதவும் தம்பி

Trending News