வியாழக்கிழமை, மார்ச் 6, 2025

மீண்டும் இணையும் ஜெய்பீம் கூட்டணி.. இந்த முறை சம்பவம் வேற மாதிரி

Jaibhim: ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் ஆடியன்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தியேட்டரில் வெளியாகாமல் டிஜிட்டலில் வெளியான போதும் படம் பல விருதுகளை தட்டி தூக்கியது.

படம் வெளியான போது சில கட்சிகள் இதற்கு எதிராக போர் கொடி தூக்கினர். ஆனால் அது அனைத்தையும் ஓரம் கட்டி இன்று வரை பலரின் பேவரைட் லிஸ்டில் இப்படம் உள்ளது.

அதேபோல் மீண்டும் இந்த கூட்டணி இணையுமா என்ற கேள்வி நெடுநாட்களாகவே இருந்து வருகிறது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

அதன்படி மீண்டும் இந்த கூட்டணி இணைய இருக்கிறது. சூர்யா நடிப்பில் ரெட்ரோ, சூர்யா 45 அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.

இந்த முறை சம்பவம் வேற மாதிரி

அதேபோல் வாடிவாசல் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. இன்னும் கங்குவா 2 படமும் லிஸ்டில் உள்ளது. அந்த வரிசையில் ஜெய் பீம் கூட்டணியும் இருக்கிறது.

தற்போது இப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தொடங்கி உள்ளது. ஜெய் பீம் படத்தை காட்டிலும் நிச்சயம் இப்படம் பல மடங்கு பவர்ஃபுல்லாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News