தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சி செய்திடாத ஜெய் பீம் கதையை துணிச்சலாக ஞானவேல் இயக்கியுள்ளார். பழங்குடியின இருளர் சமுதாய பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய நீதி நிலைநாட்டுவதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ஜெய் பீம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அமேசான் ஓடிடி தளத்தில் ஜெய் பீம் படம் வெளியானது. இப்படத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், ராஜிஷா விஜயன்,
லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஜெய் பீம் படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருந்தார்.
ராஜகண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டனும் அவருக்கு மனைவியாக செங்கனி கதாபாத்திரத்தில் லிஜோமோள் ஜோஸ் நடித்திருந்தார்கள். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜகண்ணு மனைவி, மகளை பிரிந்து செங்கல் சூளையில் வேலை பார்க்கச் செல்கிறார்.
ராஜக்கண்ணு வேலைக்கு சென்ற வீட்டில் நகை களவு போக, அந்தப் பழி ராஜகண்ணு மீது விழுகிறது. போலீசார் ராஜகண்ணுவை துன்புறுத்துகிறார்கள். கணவனை மீட்பதற்காக செங்கனி சென்னைக்கு வந்து வழக்கறிஞர் சந்துருவை நாடுகிறார்.
கடைசியில் ராஜகண்ணு மீட்கப்பட்டார் என்பதே படத்தின் இறுதிக்கட்டம். இப்படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக கணவனுக்காக நீதி கேட்டுப் போராடும் நடத்தும் செங்கனியாக லிஜோமோள் ஜோஸ் மிகவும் அருமையாக நடித்திருப்பார்.
இப்படத்தில் லிஜோமோள் ஜோஸ் நடிப்பு திரைப்படம் முடிந்த பிறகும் கண்களில் கண்ணீர் வர செய்தது. ஜெய் பீம் திரைப்படம் வெளியானதற்கு பிறகு ராஜகண்ணு, செங்கனி, இவர்களது குழந்தை என குடும்பமாக எடுக்கப்பட்ட போட்டோ தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது.