வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இதெல்லாம் சும்மா ட்ரெய்லர், மெயின் பிக்சரே இனிமே தான்.. களைக்கட்ட போகும் ஜெயிலர் ஆடியோ லான்ச்

Jailer Audio Launch: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாடல் ஏற்கனவே வெளியாகி சோசியல் மீடியாவை ஆட்சி செய்து வருகிறது.

அதைத்தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. வரும் 28 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவுக்காக பட குழு தற்போது ஆயத்தமாகி கொண்டிருக்கிறது.

Also read: ஜெயிலர் டைட்டிலுக்கு வந்த சோதனை.. கொசு தொல்லையால் பெயரை மாற்றும் முயற்சியில் நெல்சன்

அது மட்டுமல்லாமல் இதில் ரசிகர்கள் எதிர்பாராத பல சர்ப்ரைஸ்களையும் கொடுப்பதற்கு தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் அந்த விழா மேடையில் தரமான சம்பவத்தை நிகழ்த்துவதற்கு தயாராகி வருகிறாராம். அதிலும் விஜய் குறித்தும், சூப்பர் ஸ்டார் பட்டம் குறிக்கும் அவர் பேசுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அண்மையில் வெளியான ஹுக்கும் பாடல் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்கு வித்திட்டது. அதிலும் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில் பாடல் வரிகள் இடம்பெற்று இருந்தது பல விவாதத்தையும் முன்வைத்தது. இப்போது வரை இந்த நெருப்பு ஜெகஜோதியாக எரிந்து கொண்டு தான் இருக்கிறது.

Also read: 15 வினாடியில் தீர்ந்து போன இலவசம்.. மோசடி கும்பலுக்கே டஃப் கொடுக்கும் சன் பிக்சர்ஸ், கூட்டு சேர்ந்த நெல்சன்

அதன் காரணமாகவே இப்போது இசை வெளியீட்டு விழாவில் தலைவர் என்ன பேச போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வருகின்றனர். அந்த வகையில் ஹுக்கும் பாடல் எல்லாம் சும்மா ட்ரெய்லர் தான். இனிமேதான் மெயின் பிக்சரே இருக்கு என ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

இதை வைத்து பார்க்கும் போது ஜெயிலர் ஆடியோ லான்ச் களைகட்ட போவதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் சினிமா விமர்சகர்களும் இந்த நிகழ்வை ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர். அந்த வகையில் தலைவரின் அதிரடி ஆட்டம் எந்த மாதிரியான சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதை நாம் இன்னும் சில தினங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Also read: நெல்சன் மிரட்டும் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. ரஜினியை தூக்கி விடும் பான் இந்தியா ஹீரோக்கள்

Trending News