வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாஸ் காட்டிய முத்துவேல் பாண்டியன், மொத்தமாய் மண்ணை கவ்விய சிரஞ்சீவி.. ஆந்திராவை அலறவிட்ட சூப்பர் ஸ்டார்

Rajinikanth – Chiranjeevi: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு, தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல், தென்னிந்திய ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். ரஜினிக்கு சில வருடங்களுக்குப் பிறகு அமைந்த சூப்பர் ஹிட் படம் என்றால் அது இந்த படம் தான்.

ரஜினிக்கு இந்த வயதுக்கு ஏத்த கெட்டப் மற்றும் அவருடைய மாஸ் எந்த விதத்திலும் குறையாத அளவுக்கு நெல்சன் பார்த்துக்கொண்டது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ் ஆகும். படம் பான் இந்தியா மூவி ரிலீஸ் என்பதால் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என அத்தனை சூப்பர் ஸ்டாரையும் நெல்சன் இந்த படத்தில் களம் இறக்கி இருந்தார்.

Also Read:நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா மற்றும் கேரளாவிலும் தன்னுடைய வசூல் சாதனையை நடத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு, துணிவு படங்களின் கலெக்சனை தாண்டி விட்டதாக இன்றைய ரிப்போர்ட் சொல்லி இருக்கிறது. தற்போது ஆந்திராவிலும் ரஜினிகாந்த் தன்னுடைய வசூல் வேட்டையை நடத்தி இருக்கிறார்.

ஆந்திராவில் வசூல் சாதனை படைத்ததோடு மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறது ரஜினியின் ஜெயிலர் படம். இந்த படம் ரிலீஸ் ஆகி அடுத்த நாள் தான் ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய போலோ ஷங்கர் படத்தை ரிலீஸ் செய்திருந்தார். இந்த படம் படு மொக்கையாக இருப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

Also Read:காயப்பட்ட சிங்கத்தின் வெறித்தனமான கர்ஜனை.. நெல்சனை அவமானப்படுத்திய மீடியா, ஜெயிலரால் ஏற்பட்ட மாற்றம்

இதனால் ஆந்திரா ரசிகர்கள் மொத்தமாக ஜெயிலர் படத்தின் பக்கம் திரும்பி விட்டனர். ரசிகர்களின் கூட்டம் இந்த படத்திற்காக அலைமோதி கொண்டிருக்கிறது. இதனால் கண்டிப்பாக ஜெயிலர் படம் ஆந்திராவிலும் கலெக்ஷனில் ரெக்கார்டு பிரேக் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரஞ்சீவியின் படத்தை கூட விட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் படத்தை நோக்கி ரசிகர்கள் செல்லும் அளவிற்கு அவருக்கு அங்கு செல்வாக்கும் இருக்கிறது.

படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் இருப்பதால் இனி வரும் நாட்களில் ஜெயிலர் படம் 500 கோடி வசூலை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றும் நம்பர் ஒன் ரஜினி தான், இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என இந்த படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது.

Also Read:விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்து படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

Trending News