வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலர் 4வது நாள் வசூலை பார்த்து இந்த வார ரிலீஸையும் தள்ளி போடும் திரையுலகம்.. உலகளவில் ரஜினி செய்த சாதனை

Jailer Collection: ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்து நான்காவது நாள் வரை எவ்வளவு வசூலை ஈட்டி இருக்கிறது என்பதற்கான புள்ளி விவரம் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டு இருக்கிறது. நேசன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டிவிட்ட படம் தான் ஜெயிலர்.

இந்த படம் முதல் நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் அளவுக்கு வசூலை வாரி குவித்து இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு வசூலை வாரி குவித்து இருக்கிறது. ரிலீஸ் ஆன முதல் நாளில் 95.78 கோடியை ஜெயிலர் படம் வசூலித்து அனைவருக்கும் ஆட்டம் காட்டியது.

Also Read: திரும்பும் பக்கம் எல்லாம் கொட்டும் பணமழை.. ஜெயிலர் 3 நாள் வசூல் ரிப்போர்ட்

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் 56.24 கோடியையும், மூன்றாவது நாளில் 68.51 கோடியையும் குவித்திருக்கிறது. அதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று வீக் என்டில் மட்டும் 82.36 கோடியை உலகம் முழுவதும் ஜெயிலர் வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை நான்கு நாட்களில் மட்டும் ஜெயிலர் படம் 302.89 கோடியை உலகம் முழுவதிலும் இருந்தும் வசூலித்துள்ளது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உள்ளிட்டோரும் இணைந்து நடித்து பிற மொழிகளிலும் ஜெயிலர் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றனர். இந்த படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

Also Read: மாறன் தயாரிப்பில் ரஜினி நடித்த 4 படங்களின் மொத்த வசூல்.. சுக்கிர திசையை தன்வசம் வைத்திருக்கும் சன் பிக்சர்ஸ்

அது மட்டுமல்ல இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன், கபாலி, 2.0 படத்திற்கு பிறகு, நான்காவது முறையாக ஜெயிலரும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை புரிந்த 4-வது படமாக தன்னுடைய இடத்தை நிலை நிறுத்திக் கொண்டது. அதிலும் நான்கே நாட்களில் 300 கோடியை ஜெயிலர் படம் அசால்ட் ஆக தாண்டி சூப்பர் ஸ்டார் யார் என்பதை காட்டியிருக்கிறது.

அடுத்தடுத்து ரிலீசாகும் டாப் நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போடவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் 72 வயதிலும் தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை எந்த விதத்திலும் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

Also Read: நடனத்தில் கொடி கட்டி பறந்த அக்கடதேச நடிகர்.. விஜய்யால் முடியாததை 80ஸ்களிலே செய்து காட்டிய ஹீரோ

Trending News