Jailer 13th Day Collection: ரஜினியின் ஜெயிலர் படம் நேற்றுடன் வெளியாகி கிட்டதட்ட 13 நாட்கள் ஆன நிலையில் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் முந்தைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் மூலம் வெற்றி கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் தான் நெல்சன் மற்றும் ரஜினி இருவரும் தீவிரமாக பணியாற்றி இருந்தனர்.
அதற்கு கைமேல் பலனாக ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. அதன்படி முதல் வாரம் முடிவில் கிட்டத்தட்ட 375 கோடி வசூல் செய்து ஜெயிலர் சாதனை படைத்திருந்தது. மேலும் பனிரெண்டாம் நாள் முடிவில் 500 கோடியை தாண்டி சாதனை படைத்திருந்தது. அதன்படி 12வது நாள் முடிவில் தோராயமாக 510 கோடி வசூல் செய்திருந்தது.
Also Read : விக்ரம், ஜெயிலர் கொடுத்த தைரியம்.. மாஸ்டர் பிளான் போட்டு 2000 கோடியை தட்டி தூக்க போகும் ரஜினி, கமல்
ஆனால் நேற்றிலிருந்து ஜெயிலர் வசூல் ஆட்டம் காண தொடங்கி இருக்கிறது. அதாவது ஜெயிலர் அலை இப்போது குறைய தொடங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். எதிர்பார்த்ததை விட இப்போதே நல்ல லாபத்தை தான் இப்படம் பெற்றிருக்கிறது. ஆனால் நேற்று திடீரென அதிரடியான சரிவை சந்தித்திருக்கிறது.
அதன்படி ஜெயிலர் படம் 13-வது நாள் முடிவில் இந்தியா முழுக்க வெறும் 4.50 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக இந்தியா முழுவதும் இதுவரை 292.70 கோடி கலெக்ஷன் செய்து இருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை 518 கோடி ஜெயிலர் படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Also Read : விஜய்க்கு சொம்படித்து ரஜினியை கவிழ்த்து விடும் பிரபலம்.. ஜெயிலர் வெற்றிக்கு சொன்ன மொக்கையான காரணம்
ஆனால் நேற்றைய தினம் ஜெயிலர் படம் வெறும் 8 கோடி மட்டுமே உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதால் இனி படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்காது என கணிக்கப்படுகிறது. ஆனாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் அதிக வசூல் செய்த படமாக தற்போது ஜெயிலர் படம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
ரஜினியின் திரை வாழ்க்கையில் இதுவரை 2.0 படம் அதிக வசூல் செய்த நிலையில் அடுத்த இடத்தை ஜெயிலர் பிடித்திருக்கிறது. ஜெயிலர் வசூலை முறியடிக்க விஜய்யின் லியோ படம் உருவாகி வருகிறது. ஆகையால் குறைந்த நாட்களிலேயே இந்த படத்தின் வசூலை லியோ படம் தட்டி தூக்குகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.