வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவராஜ் குமாரை பார்த்து பயந்த ஜெயிலர் படக்குழு.. டைகர் இருக்க பயமேன் என அதிர வைத்த ரஜினி

Actor Sivarajkumar In Jailer: தற்போது வெளிவரும் படங்கள் அனைத்தும், எல்லா மொழிகளிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து அவர்களிடமிருந்து வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பலதரப்பட்ட ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து பான் இந்தியா படமாக எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த வாரம் வெளிவந்த ஜெயிலர் படம் அமோக வரவேற்பை பெற்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தில் மலையாள நடிகராக விநாயகன், அர்ஜுன், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடித்துக் கொடுத்து இருக்கிறார்கள். இதில் சிவராஜ்குமார் கன்னடத்தில் உள்ள ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் ரஜினிக்காக ஜெயிலர் படத்தில் வந்து நடித்திருக்கிறார்.

Also read: ரஜினி வீட்டில் ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த தர்ம அடி.. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் விமர்சகர்

மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவருடைய சீன்கள் அனைத்தும் ரொம்பவே தூக்கலாக இருந்ததாம். அதாவது இவருடைய நடிப்பை பார்த்து மொத்த படக்குழுவமே மிரண்டு இருக்கிறார்கள். முக்கியமாக இவருடைய காட்சிகள் அனைத்தும் எடிட் பண்ணி பார்க்கும் பொழுது ரொம்பவே பயங்கரமாக நடிப்பு இருந்திருக்கிறது.

பிறகு இந்த விஷயத்தை ரஜினி இடம் பொய் சொல்லி இருக்கிறார்கள். சார், இதில் சிவராஜ் குமார் நடித்த காட்சிகள் அனைத்தும் ரொம்பவே பிளஸ் ஆக இருக்கிறது. அந்த மாதிரி இருந்தால் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டிருக்கிறார்கள். பிறகு ரஜினி அப்படி என்றால் அந்த காட்சியை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டு பார்த்திருக்கிறார்.

Also read: மொத்தத்தையும் கெடுத்து குழப்பிய அனிருத்.. ரஜினியிடம் வசமாய் சிக்கி விழி பிதுங்கிய நெல்சன்

அப்பொழுது சிவராஜ் குமார் கண்கள் மிகவும் பவர் ஃபுல்லாகவும், கேமரா முன் வந்த பிறகு ஒரு டெரரான நடிகராக மாறியதையும் பார்த்து ரஜினி வியப்படைந்து இருக்கிறார். அத்துடன் இந்த காட்சிகள் அனைத்தும் அப்படியே வையுங்கள் இப்படத்திற்கு இது மிகப்பெரிய சிறப்பாக அமையும் என்று கூறியிருக்கிறார்.

அதன்படி சிவராஜ் குமார் நடித்த அனைத்து காட்சிகளுமே ஜெயிலர் படத்தில் அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் ஓவர் டேக் செய்யும் அளவிற்கு கடைசியில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினி அனைத்தையும் ஸ்கோர் செய்து விட்டார். ஆக மொத்தத்தில் ரெண்டு சூப்பர் ஸ்டார் போட்டி போட்டு நடித்து படத்தை தாறுமாறாக கொடுத்து விட்டார்கள்.

Also read: விஜய் செய்தது போல் ரஜினியால் செய்ய முடியுமா.? செக் வைத்து சவால் விட்ட பிரபலம்

Trending News