புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அரேபிய குதிரையாக மாறி சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட தமன்னா.. ட்ரெண்டாகும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

Jailer First Single: சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இதுவே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ப்ரோமோ வீடியோவாக வெளியாகி இருந்த அந்த அறிவிப்பில் தமன்னாவின் ஐட்டம் பாடல் தான் ஃபர்ஸ்ட் சிங்கிள் என்ற குறிப்பு இடம் பெற்றிருந்தது.

Also read: தமன்னாவை வைத்து போடும் பிள்ளையார் சுழி.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ

இதனாலேயே ரசிகர்கள் இன்று காலை முதலே சோசியல் மீடியாவே கதி என்று இருந்து வந்தனர். அந்த வகையில் தற்போது பலரும் எதிர்பார்த்த அந்த முதல் பாடல் அட்டகாசமாக வெளியாகி இருக்கிறது. அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கும் இப்பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

ஷில்பா ராவ் பாடியிருக்கும் நூ காவாலா என்ற இப்பாடலில் தமன்னா பல்லாயிரம் டான்ஸர்களுக்கு நடுவில் அரேபிய குதிரையாக மாதிரி குத்தாட்டம் போட்டிருக்கிறார். பயங்கர கலர்ஃபுல்லாக இருக்கும் இப்பாடலில் அவருடைய டான்ஸ் மூவ்மெண்ட் வெறித்தனமாக இருக்கிறது.

Also read: வெற்றிக்காக முட்டி மோதி கொண்டிருக்கும் ரஜினி.. மொத்தமாய் மண் அள்ளி போட்ட ஜெயிலர் பட ஹீரோயின்

அவரோடு இணைந்து தலைவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தன்னுடைய ஸ்டைலில் ஆடி இருப்பது நிச்சயம் ரசிகர்களுக்கான மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். அந்த வகையில் இனிமேல் சோசியல் மீடியாக்கள் முழுவதும் இந்த பாடல் தான் ஒலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Trending News