புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கேக் வெட்டி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் புகைப்படங்கள்.. நெல்சன் உங்க மூஞ்சில தான் ஈ ஆடல, ரிலீஸ் பயமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தமன்னா, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

நெல்சன் தன்னுடைய முழு கடின உழைப்பையும் போட்டு ஜெயிலர் படத்தை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாரையே உருமாற்றி ரசிகர்கள் முன் காண்பித்துள்ளார். அதாவது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் வீடியோ வெளியான போது ரஜினியை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டனர்.

Also Read : விக்ரம் வசூல், லியோ பிசினஸ் மொத்தமாக அள்ளிய ஜெயிலர்.. சம்பவம் செய்யும் நெல்சன்

ரஜினி ஓல்ட் கெட்டப்பில் நடித்து வரும் நிலையில் அவரை சற்று இளமையாக நெல்சன் காட்டியிருக்கிறார். மேலும் இது ரஜினிக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அப்போது ஜெயிலர் படக்குழு, தமன்னா, நெல்சன், ரஜினி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெயிலர் நிறைவு விழா

jailer-cinemapettai
jailer-cinemapettai

Also Read : இமேஜ் பார்க்காமல் இணையும் 3 சூப்பர் ஸ்டார்கள்.. ஜெயிலர் வில்லனுக்காக ஓகே சொன்ன ரஜினி

பாண்டியா பதற விட்டுட்ட

jailer-rajini
jailer-rajini

இந்தப் புகைப்படங்களை ஜெயிலர் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. மேலும் வெளியான சில நிமிடங்களிலேயே ரஜினி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள். ரஜினியை பாண்டியா பதற விட்டுட்ட என்ற கமெண்ட்களையும் தெறிக்கவிட்டனர்.

ஜெயிலர் படக்குழு

jailer
jailer

ஆனால் நெல்சன் தான் முகத்தில் ஒரு பதட்டத்துடன் இருக்கிறார். காரணம் ரிலீஸ் நெருங்குவதால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வாரா என்ற பயம் அவர் முகத்தில் தெரிகிறது.

Also Read : ஜெயிலர் ரிலீசுக்கு முன்பே எகிறிய மார்க்கெட்.. தனுஷை தொடர்ந்து நெல்சனை புக் செய்த டாப் ஹீரோ

Trending News