வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஜெயிலர் அலையில் மூழ்கடிக்கப்பட்ட படம்.. ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து துரத்தி அடிக்கப்படும் சம்பவம்

Jailer Movie: பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள். ஏனென்றால் எப்படியும் பெரிய ஹீரோக்களின் படங்கள் வசூல் செய்துவிடும். இதனால் சிறு பட்ஜெட்டில் எடுத்தாலும் அந்த படத்திற்கு அதிகபடியான நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இப்போது ரஜினியின் ஜெயிலர் படத்தால் வந்த சுவடே தெரியாத அளவுக்கு பெரிய நடிகரின் படம் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகிறது என்பதால் எந்தப் படமும் இந்த வாரம் வெளியாகவில்லை.

Also Read : தலைவருக்கு கொடுத்த ஜெயிலர் வெற்றி ஏன் விஜய்க்கு கொடுக்கல.. மறைமுகமாக நெல்சன் புலம்பிய காரணம் இதுதான்

ஆனால் தெலுங்கில் சிரஞ்சீவியின் போலா சங்கர் படம் வெளியாகி இருந்தது. அதாவது இவரது நடிப்பில் கடைசியாக வால்டர் வீரய்யா படம் வெளியான நிலையில் அடுத்ததாக போலா சங்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் தான் போலா சங்கர்.

மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ், முரளி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது. தமிழில் ஜெயிலர் படத்திற்கு எப்படி எதிர்பார்ப்பு இருந்ததோ அதேபோல்தான் தெலுங்கு சினிமாவிலும் போலா சங்கர் படத்தை எதிர்பார்த்தனர்.

Also Read : ஜெயிலர் வசூலை தாங்க முடியாத ப்ளூ சட்டை.. தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் பிளாக்பஸ்டர் உறுதி தான் 

இதனால் முதல் நாள் நல்ல வசூலை பெற்ற நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது. மேலும் இப்படத்தால் திரையரங்குகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால் அடுத்த வாரமே திரையரங்குகளில் இருந்து இப்படத்தை தூக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒருபுறம் படம் சுமார் என்றாலும் மற்றொரு படம் ஜெயிலர் படம் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெறுகிறது.

ஆகையால் சிரஞ்சீவியின் திரை வாழ்க்கையில் மிகவும் மோசமான தோல்வி அடையும் படமாக போலா சங்கர் இருக்கும் என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்டு வெளியான படங்களில் டிசாஸ்டர் ஆன படமாகவும் இப்படம் தான் இடம்பெறுகிறது. ஒரு மெகா ஸ்டார் நடிகருக்கு இவ்வாறு ஏற்பட்டது மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.

Also Read : ஜெயிலர் வர்மனை விட 10 மடங்கு டேஞ்சரான விசுவாசிகள்.. மனித உயிரை காவு வாங்கும் விநாயகனின் வளர்ப்பு

Trending News