திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நெல்சனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த மாறன்.. ஜெயிலரை வைத்து பல நாள் கனவை நிறைவேற்றும் தந்திரம்

Jailer: ஜெயிலர் பட வெற்றியால் யார் சந்தோஷம் அடைந்தார்களோ, இல்லையோ நெல்சன் உச்சகட்ட மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறார். பீஸ்ட் படத்தின் மூலம் மிகப்பெரும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான இவர் தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.

கடந்த வாரம் வெளியான ஜெயிலர் 6 நாட்கள் கடந்த பிறகும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் 400 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த கலாநிதி மாறன் நெல்சனை இப்போது மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விட்டாராம்.

Also read: ரஜினி ரசிகனாக உச்சகட்ட சந்தோஷத்தில் கலாநிதி மாறன்.. நெல்சனுக்காக தயாராகும் பல கோடி மதிப்பிலான பரிசு

அதாவது ரஜினியை வைத்து பாக்ஸ் ஆபிஸில் புது கணக்கு ஒன்றை போட்ட கலாநிதி மாறன் தற்போது அதில் பல மடங்கு வெற்றியை அடைந்துள்ளார். இதை வைத்தே தன்னுடைய பல நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ளவும் அவர் திட்டமிட்டு இருக்கிறாராம்.

எப்படி என்றால் அவருக்கு நீண்ட நாட்களாகவே அஜித்தை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க போகிறது என்ற செய்திகளும் உலா வந்தது. ஆனால் இப்போது சன் பிக்சர்ஸ் நெல்சனை வைத்து இந்த கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறதாம்.

Also read: மூணு மாச கடன் நான்கே நாளில் திருப்பிக் கொடுத்த ரஜினி.. நீங்க கடவுளுக்கும் மேல என புகழும் பிரபலம்

அந்த அளவுக்கு நெல்சனுக்கான மரியாதை இப்போது எக்கச்சக்கமாக கூடி போயிருக்கிறது. அந்த வகையில் விரைவில் இந்த மெகா கூட்டணியின் அறிவிப்பு வெளிவரலாம் என்கிறது திரையுலக வட்டாரம். தற்போது அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார்.

பல மாதங்களாக தள்ளிப் போடப்பட்டு வந்த இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதை முடித்தவுடன் அஜித் சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி போட இருக்கிறார். இதுதான் இப்போது மிகப் பெரும் எதிர்பார்ப்புக்கு வழிவகுத்துள்ளது.

Also read: ஒரு வழியாக மொத்த ஸ்கிரிப்ட்டை உறுதி செய்த அஜித்.. சொன்ன மாதிரி ரிலீஸ் தேதியை லாக் செய்த மகிழ் திருமேனி

Trending News