சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த இந்தப் படம் தமிழில் வெளியான பழைய திரைப்படங்களின் கதையை காப்பி அடித்ததா என்ற ஒரு சர்ச்சை தற்போது உருவாகியுள்ளது. அவை எந்தெந்த திரைப்படங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.
Also read: ஜெயிலர் படத்தில் நான் நடிக்கவில்லை.. அதிரடியாக அறிவித்த பிரபல நடிகை
பல்லாண்டு வாழ்க: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் 1975 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளிவந்தது. இதில் எம்ஜிஆர் ஜெயில் கைதிகளை அன்பால் வெல்லலாம் என்ற ஒரு விஷயத்தை ஆணித்தரமாக கூறியிருப்பார். இந்த கதை கருதான் ஜெயிலர் திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவல் தெய்வம்: சிவாஜி கணேசன் நடிப்பில் 1969 இல் இப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிவாஜி சிறைக்கைதியாக நடித்திருப்பார். ஜெயில் பின்னணியை கொண்ட இந்த படத்தில் இருக்கும் சில காட்சிகளும் ஜெயிலர் படத்திற்காக காப்பியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைதி கண்ணாயிரம்: 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் முழு ஆங்கில நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் இருந்தும் சில காட்சிகளை நெல்சன் ஜெயிலர் திரைப்படத்திற்காக காப்பியடித்து விட்டாராம்.
உதயகீதம்: 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் மோகன் சிறை கைதியாக நடித்திருப்பார். நடிகை லட்சுமி போலீசாக நடித்திருப்பார். ஜெயில் கைதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் ஜெயிலர் திரைப்படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Also read: ரஜினி பட டைட்டிலை வைத்து ஹிட் கொடுத்த 5 படங்கள்.. வேற லெவலில் இருந்த சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்
அந்த வகையில் நெல்சன் மேற்கண்ட இந்த நான்கு திரைப்படங்களின் கதைகளையும் கலந்து தான் ஜெயிலர் படத்தை எடுத்து வருவதாக ஒரு சர்ச்சை தற்போது கிளம்பி உள்ளது. ஏற்கனவே அவர் மீது ரஜினி ரசிகர்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மொத்த கதையும் பழைய திரைப்படங்களின் காப்பி தான் என்று உலா வரும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படியாக வேறு எதுவும் புதுமையான காட்சிகள் இல்லை என்றும் பத்திரிகையாளர்கள் ஆணித்தரமாக அடித்து கூறி வருகின்றனர்.
Also read: சிவகார்த்திகேயனுக்காக கெஞ்சிய நெல்சன்.. விடாப்பிடியாக மறுத்த ரஜினிகாந்த்