சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

100 கோடியை தொட முடியாமல் திணறிய ஜெய்லர் முதல் நாள் வசூல்.. ஏரியா வாரியாக அதிகாரப்பூர்வமாக வந்த ரிப்போர்ட்

Jailer Movie collection: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் வரை பட குழுவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் ரொம்பவே பதட்டமாக தான் இருந்தது. இதற்கு காரணம் முந்தைய படங்களின் நெகட்டிவ் விமர்சனங்கள் தான்.

அந்த அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களையும் அடித்து தூள் கிளப்பிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குனர் நெல்சனின் கதையை தேர்ந்தெடுத்ததில் ரஜினி சோடை போகவில்லை என படத்தின் விமர்சனங்களை நிரூபித்து விட்டன. தமிழகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் இயக்குனர் நெல்சனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நெல்சனுக்கும் இது ஒரு மறுபிறப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:பல நாடுகளில் சகித்துக் கொள்ள முடியாத ஜெயிலர் படம்.. பெரிய பஞ்சாயத்தால் வந்த பிரச்சனை

சமீப காலமாக படத்தின் வெற்றி, தோல்வியை தாண்டி முதல் நாள் வசூல் என்பது ரொம்பவே முக்கியம் ஆகிவிட்டது. அதிலும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் கண்டிப்பாக இந்த வசூல் நூறு கோடியாக தான் இருக்க வேண்டும் என கோலிவுட் எழுதப்படாத விதி வந்துவிட்டது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் ரிப்போர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

இந்த ரிப்போர்ட்டின் படி நேற்று முதல் நாளில் 100 கோடி வசூலை தொடர் ஜெயிலர் படம் தவறிவிட்டது. தமிழ்நாட்டின் மொத்த வசூல் 26 கோடியாகும். இதேபோன்று கேரளாவில் 5.85 கோடியும், கர்நாடகாவில் 11.85 கோடியும், ஆந்திராவில் 12 கோடியும், மற்ற மாநிலங்களில் மூன்று கோடியும், ஓவர்சீஸ் நாடுகளில் 40 கோடியும் வசூல் ஆகி முதல் நாள் வசூல் 98.70 கோடியாக வந்திருக்கிறது.

Also Read:ஜெயிலரை பார்த்தபின் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா.?

முதல் நாள் 100 கோடி வசூல் என்ற சாதனையை படைக்க ஜெயிலர் படம் தவறிவிட்டது. அதிலும் ஒரு சில கோடிகள் வித்தியாசத்திலேயே இது நடந்திருக்கிறது. இருந்தாலும் இன்று காலை விட்டதை பிடித்து விட்டது சூப்பர் ஸ்டார் படம். இன்றைய நிலவரப்படி ஜெய்லர் படம் 100 கோடி வசூலை தாண்டி விட்டது.

சில வருடங்களுக்குப் பிறகு ரஜினியின் படம் இப்படி ஒரு ஹிட் அடிப்பது அவருடைய ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. ரஜினிகாந்த் எதிர்பார்த்தது இந்த படத்தில் நடந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதே வேகத்தோடு ரஜினி இமயமலையிலிருந்து திரும்பியது தன்னுடைய 170 ஆவது படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் கொடுத்த ஜெயிலர் ரிவ்யூ.. பத்திரிக்கையாளர் ஷோவில் நடந்த கலாட்டா

Trending News