திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் வர்மனுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. மாமனாரை தொடர்ந்து மருமகனுடனும் செய்யப்போகும் வில்லத்தனம்

Jailer Vinayakan’s Upcoming Movies:  தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிறமொழி நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. அதிலும் மலையாள நடிகரான விநாயகன்தற்போது தமிழ் சினிமாவில் ரொம்பவே ஷைன் ஆகி கொண்டிருக்கிறார். இவர் இதற்கு முன்பு திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வர்மன் கேரக்டரில் நடித்த பிறகு இவரதும் மார்க்கெட் எகிறி விட்டது.

ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தில் மலையாளியாகவே படம் முழுக்க பேசி தன்னுடைய வில்லத்தனத்தை காட்டிய இருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் இவரை பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசத் துவங்கினர். அது மட்டுமல்ல இவருக்கு பட வாய்ப்புகளும் வரிசையாக குவிந்து கொண்டிருக்கிறது.

Also Read: தலையை சுற்ற வைக்கும் ஜெயிலர் வர்மனின் சம்பளம்.. ஒரே படத்தால் எகிறிய மார்க்கெட்

இப்பொழுது மாமனார் ரஜினியுடன் சம்பவம் செய்த விநாயகன், அடுத்ததாக மருமகன் தனுஷ் உடன் அடுத்த சம்பவத்திற்கு தயாராகி விட்டார். ஜெயிலர் படத்திற்கு பின் விநாயகன் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நிச்சயம் இந்த படத்திலும் ஜெயிலர் வர்மனை விட செம ஸ்ட்ராங்கான கேரக்டரில் நடித்து மிரட்டப் போகிறார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் தென் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், வரும் டிசம்பர் 15 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. அந்த டீசரில் நிச்சயம் விநாயகன் நடித்த சீன் இருக்கும்.

Also Read: ஜெயிலர் வர்மனை விட 10 மடங்கு டேஞ்சரான விசுவாசிகள்.. மனித உயிரை காவு வாங்கும் விநாயகனின் வளர்ப்பு

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் விநாயகன் வில்லனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அடுத்த வருடத்திலேயே திரையிடவும் திட்டமிட்டனர். ஆனால் ஒரு சில காரணங்களாக மெல்லிசாகாமல் இருக்கும் நிலையில் இந்த வருட இறுதியில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதிலும் விநாயகன் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே ஜெயிலர் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து விநாயகன் நடிப்பில் கேப்டன் மில்லர், துருவ நட்சத்திரம் போன்ற இரண்டு படங்கள் வெளிவரப் போகிறது. இதை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: தர லோக்கலான கதாபாத்திரத்திற்கு பெயர் போன 6 வில்லன்கள்.. தனுசுக்கே தண்ணி காட்டிய விநாயகன்

Trending News