வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலர் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்.. 600 கோடி வசூலை பார்த்ததும் ஜர்க் அடிச்ச சன் பிக்சர்ஸ்

Jalier Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- நெல்சன் கூட்டணியில் ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. முதல் நாளிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் இதுவரை 600 கோடி வரை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முன்பு எடுத்த முடிவிலிருந்து ஜர்க் அடித்திருக்கிறது. அதாவது ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் அதன் ஓடிடி ரைட்ஸ் பிஸ்னஸ்சும் பல கோடிகளில் நடந்துள்ளது.

Also Read: ரஜினி, விஜய் ரசிகர்களை குதூகல படுத்திய ஷாருக்கான்.. ஜவான் மேடையை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்

இதனால் ஜெயிலர் படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இதன் பின்புலத்தில் சன் பிக்சர்ஸ் பார்த்த கோல்மால் வேலை வெளிவந்துள்ளது. பொதுவாக எல்லா பெரிய பட்ஜெட் படங்களையும் வாங்குவது நெட் பிளிக்ஸ் தான் .

அந்த வரிசையில் ஜெயிலர் படத்தையும் முதலில் சன் பிக்சர்ஸ் உடன் வாங்குவதாக ஒப்பந்தம் போட்டது நெட் பிளிக்ஸ். ஆனால் இப்பொழுது அந்த ஒப்பந்தத்தை சன் பிக்சர்ஸ் கேன்சல் செய்துள்ளது. அதிக விலைக்கு ஜெயிலர் படத்தை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது.

Also Read: அடுத்தடுத்து 3 படங்கள் கமிட்டாகி வாங்கிய பெருந்தொகை.. ஜெயிலர் விநாயகன் காட்டில் கொட்டும் பேய் மழை

இது நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. ஏனென்றால் போட்டி நிறுவனமாக பார்க்கக்கூடிய அமேசான் ப்ரைம் வீடியோ ஜெயிலர் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை தட்டி பறித்து இருப்பது நெட் பிளிக்ஸ்-க்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

முன்பு நெட் பிளிக்ஸ் 100 கோடியை விட அமேசான் ப்ரைம் வீடியோ கூடுதலாக பல கோடிகளை கொடுத்து ஜெயிலர் படத்தின் வெளியிட்டு உரிமையை தட்டி தூக்கி இருக்கிறது. இதன் காரணமாக விரைவில் ஜெயிலர் படத்தை ஓடிடி-யில் வெளியிட அமேசான் ப்ரைம் வீடியோ திட்டமிட்டுள்ளது.

Also Read: ஜெயிலரை விட டபுள் மடங்கு நெல்சன் வாங்க போகும் சம்பளம்.. ஃபெவிக்கால் போட்டு ஒட்டிய சன் பிக்சர்ஸ்

Trending News