Jailer Third Single: சோசியல் மீடியாவை திறந்தாலே ஜெயிலர் படத்தின் ஆரவாரம் தான் அதிகமாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பான் இந்தியா நடிகர்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதைத்தொடர்ந்து வரும் 28ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதனாலேயே இப்போது ரசிகர்கள் ஜெயிலர் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்துள்ளது.
Also read: முள்ளும் மலரும் மகேந்திரனின் 5 தரமான படங்கள்.. அடேங்கப்பா! ரஜினிக்கு மட்டும் இத்தனை ஹிட் படங்கள்
மேலும் இப்படத்திலிருந்து வெளியான முதல் பாடலான காவாலா மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதை தொடர்ந்து வெளியான ஹுக்கும் பாடலும் பட்டையை கிளப்பியது. அதனாலேயே மூன்றாம் பாடல் அறிவிப்பு வெளியான போது ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் இந்த பாடல் அந்த ஆர்வத்தை பொய்யாக்கியுள்ளது.
அந்த வகையில் பாடகி தீ பாடியுள்ள இந்த பாடல் முதல் இரண்டு பாடல் அளவுக்கு இல்லை என்ற கருத்து தான் இப்போது எழுந்துள்ளது. பகையாகி போனா பலியாவ வீணா, புரிஞ்சிடாத பாதை நூறு இவன் ரூட்டே வேறு போன்ற வரிகள் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.
அதனால் இப்போது ஜெயிலர் பட குழு இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லரில் அதிக கவனம் செலுத்தும் நிலைமைக்கு ஆளாகி இருக்கிறது. ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் தலைவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் இப்போது பெருசாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த மூன்றாம் பாடல் எடுபடாமல் போனாலும் இசை வெளியீட்டு விழாவில் பல தரமான சம்பவங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை எதிர்நோக்கி தான் ரசிகர்கள் இப்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.