திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

25 நாட்கள் தாண்டியும் வசூலை வாரி குவிக்கும் ஜெயிலர்.. ஓடிடி ரிலீஸ் நெருங்கினாலும் குறையாத கலெக்ஷன்

Jailer 25 Days Collection: சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை இன்னும் பத்து வருடங்களுக்கு யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்ற அளவுக்கு ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் 25 நாட்களைக் கடந்தும் ஜெயிலர் படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது. வசூலையும் வாரிக் குவித்து சன் பிக்சர்ஸ் கஜானாவை நிரப்பி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே ரஜினி இமயமலைக்கு சென்றுவிட்டார். மேலும் ஆரம்பத்தில் இருந்தே ஜெயிலர் படத்தைப் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வர தொடங்கியது.

Also Read : தன் கையை வைத்தே கண்ணை குத்தப் போகும் ரஜினி.. ஐஸ்வர்யாவால் விழி பிதுங்கி நிற்கும் சூப்பர் ஸ்டார்

ஆனால் ரிலீசுக்கு பிறகு அனைத்தும் சுக்குநூறாகிவிட்டது. ரஜினியின் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ஜெயிலர் படம் பெற்றிருக்கிறது. அதன்படி முதல் வாரம் முடிவில் 375 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது வாரத்தில் 525 கோடி வசூல் செய்தது. இப்போது நான்கு வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் ஜெயிலர் லாபத்தால் உச்சி குளிர்ந்து போன சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினி மற்றும் நெல்சன் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கி இருந்தார். இந்நிலையில் செப்டம்பர் 4 நேற்று நிலவரப்படி ஜெயிலர் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 633 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் 329 கோடி வசூல் செய்தது.

Also Read : ஜெயிலர் வேகத்தை குறைத்த குஷி.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

மேலும் வெளிநாடுகளில் 303 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடா போன்ற இடங்களில் தான் அதிக வசூல் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிலும் வணிக ரீதியாக ஜெயிலர் படம் இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நட்சத்திர பலம் மட்டும் இன்றி கதைக்களமும் முக்கியமான காரணமாக இருந்தது.

மேலும் ஜெயிலர் படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அப்படி இருக்கும் நேரத்திலும் ஜெயிலர் வசூல் குறையாதது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டு களித்து வருகிறார்கள்.

Also Read : ஜெயிலர் வெற்றிக்கு காரணமான 2 நடிகர்கள்.. பேராசையில் தலைவர் 170-க்கு கண்டிஷன் போட்ட சூப்பர் ஸ்டார்

Trending News