திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

தலைவரை கை விடாமல் காப்பாற்றிய நெல்சன்.. மொத்தமாய் ஆடிப்போன சன் பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட கையோடு தற்போது மும்பையில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். அங்கு அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிக் கொண்டிருக்கும் லால் ஸலாம் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே மோகன்லால் ஜாக்கி ஷெ ரஃப், நவீன் போன்றவர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கிலிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

Also Read:ரஜினியை திமிரில் திட்டிய வடிவுக்கரசி.. தண்டவாளத்தில் தலையை வைத்து விட்ட சம்பவம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை இன்றுவரை தன்னுடைய கைவசம் வைத்திருந்தாலும் கடந்த சில வருடங்களாக இவர் கொடுத்த படங்களின் மீது அவருடைய ரசிகர்களுக்கே பெரிய அளவில் திருப்தி இல்லாமல் போனது. சமீபத்திய ரிலீசான தர்பார் மற்றும் அண்ணாத்தே திரைப்படங்களே இதற்கு சிறந்த உதாரணம். ரஜினி இனி இப்படியே நடித்துவிட்டு போய்விடுவாரோ என்ற கவலையும் அவருடைய ரசிகர்களிடையே இருந்து வந்தது.

தன்னுடைய தொடர் தோல்விகளை புரிந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற ஆசையில் தான் இளம் இயக்குனரான நெல்சனுக்கு தன்னுடைய அடுத்த படத்தின் வாய்ப்பை கொடுத்திருந்தார். ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் படத்தில் நெல்சன் கொஞ்சம் தடுமாறி இருந்ததால் ரசிகர்களுக்கும் ஜெயிலர் படம் எப்படி வருமோ என்ற பயம் இருந்து வந்தது.

Also Read:மலையாள சினிமாவில் ரஜினி நடித்த 2 படங்கள்.. கமலுடன் இணைந்து போட்ட வெற்றி கூட்டணி

ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட இருக்கும் நிலையில் தற்போது முழு படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் பார்த்திருக்கிறது. படம் நன்றாக வந்திருப்பதை பார்த்து அந்த நிறுவனமே மகிழ்ச்சி அடைந்ததோடு தற்போது சூப்பர் ஸ்டாருக்கும் சம்பளத்தை அதிகம் கொடுத்திருக்கிறதாம். அவ்வளவு பெரிய நம்பிக்கை அந்தப் படத்தின் மீது சன் பிக்சர்சிற்க்கு வந்து விட்டதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மட்டுமல்லாமல் இயக்குனர் நெல்சனுக்கும் இது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமான சூழ்நிலைதான். டாக்டர் போன்ற பெரிய வெற்றி படத்தை கொடுத்த நெல்சன் விஜய்யை இயக்கும் போது கொஞ்சம் திணறி இருக்கிறார் என்பது உண்மை. இருந்தாலும் ரஜினிகாந்த் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தற்போது காப்பாற்றி இருக்கிறார். சூப்பர் ஸ்டாரும் விட்ட இடத்தை விரைவில் பிடிக்க இருக்கிறார்.

Also Read:ரீ ரிலீசுக்கு தயாராகும் ரஜினியின் 100 கோடி வசூல் படம்.. எல்லா இடத்திலும் தலைவர் கில்லி மாதிரி

- Advertisement -spot_img

Trending News