புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

3 சூப்பர் ஸ்டார்கள் உடன் உருவாகும் ஜெயிலர்.. உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும் சூப்பர் ஸ்டார் படம் என்பதால் நெல்சன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த படத்தில் நடிப்பது ஏற்கனவே அறிந்த விஷயம் தான். மேலும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மற்றொரு சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளார்.

Also Read: அடுத்தடுத்த சர்ப்ரைஸால் திக்கு முக்காட வைக்கும் ஜெயிலர்.. ரஜினியுடன் இணைய போகும் டாப் ஹீரோ

அதாவது மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பலம் வந்து கொண்டிருக்கும் மோகன்லால் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதை உறுதி செய்யும் வகையில் சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மோகன்லாலின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் மோகன்லால் கமலுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் மம்முட்டியுடன் இணைந்து தளபதி படத்தில் ரஜினி நடித்திருந்தார். இந்நிலையில் முதல்முறையாக மோகன்லாலுடன் ஜெயிலர் படத்தில் ரஜினி நடிக்கிறார்.

Also Read: ரஜினி உதாசீனப்படுத்திய இயக்குனர்.. ஆறுதல் கூறி அரவணைத்த சிவகார்த்திகேயன்

இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களில் மிகப்பெரிய ஹீரோக்கள் நடிப்பதை விரும்ப மாட்டார் என்று ஒரு பேச்சு போய்க்கொண்டிருந்தது. ஆனால் அது மொத்தமாக ஜெயிலர் படத்தின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார் என 3 மொழியில் உள்ள சூப்பர் ஸ்டார்கள் ஜெயிலர் படத்தில் சங்கமித்துள்ளனர்.

இதனால் இப்போதே ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி படத்தில் பல சஸ்பென்ஸ் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் விரைவில் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மோகன்லாலின் புகைப்படம்

jailar-mohanlal-1-cinemapettai.jpg
jailar-mohanlal-cinemapettai

Also Read: நின்றுபோன படத்தை தூசி தட்டும் ரஜினி.. தலைவர் முடிவால் உச்சகட்ட சந்தோஷத்தில் லைக்கா

Trending News